ஐ.சி.சி வெளியிட்ட ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் – முதலிடத்தில் யார் தெரியுமா?

Rizwan
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்த பிறகு தற்போது ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி தற்போது வெளியான இந்த தரவரிசை பட்டியலில் விராட் கோலி 836 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 801 புள்ளிகளுடன் 3-வது இடத்தை நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடிக்கவில்லை என்றாலும் தொடர்ச்சியாக பல அரை சதங்களை அவர் விளாசி உள்ளதால் எந்த ஒரு பிரச்சினையும் இன்றி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த பட்டியலில் முதல் இடத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் விராட் கோலியை விட 37 புள்ளிகள் அதிகம் பெற்று 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே மிகச் சிறப்பான பேட்டிங் பார்மில் இருக்கும் பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக முதல் இடத்தில் இருந்து வருகிறார்.

அதனை தொடர்ந்து இந்தப் பட்டியலில் இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த டிகாக் 5-வது இடத்திலும், சிறப்பாக விளையாடிய வேண்டர்டுஷன் 10 இடங்கள் முன்னேறி டாப் 10-ல் 10வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரைத் தவிர இந்த டாப்-10 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் வேறு எந்த இந்திய வீரருக்கும் இடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பும்ரா வேணாம். மீட்டிங்கில் அதிரடியாக பேசிய ரோஹித் – என்ன நடந்தது?

அதேபோன்று டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் டாப் 10-ல் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. மேலும் டி20 போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலிலும் இந்திய வீரர்கள் ஒருவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement