வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பும்ரா வேணாம். மீட்டிங்கில் அதிரடியாக பேசிய ரோஹித் – என்ன நடந்தது?

bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலுமே இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்தித்து மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்தது. பலம் வாய்ந்த இந்திய அணி அனுபவமில்லாத தென்னாப்பிரிக்க அணியை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் பலரது விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளது. இந்நிலையில் நாடு திரும்பிய இந்திய அணியானது பிப்ரவரி 6ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளது.

pant4

- Advertisement -

ஏற்கனவே தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா காயம் காரணமாக அந்த தொடரை தவற விட்டதால் தற்போது காயத்தில் இருந்து முழுவதுமாக மீண்ட அவர் இந்தத் தொடரில் கேப்டனாக அணிக்கு திரும்புகிறார். இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியை தேர்வு செய்யும் கூட்டம் மும்பையில் நடைபெற்றதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடருக்கு தேவையான வீரர்களை அவராகவே முன்வந்து கேட்டு வாங்கியதாகத் தெரிகிறது. அதன்படி அந்தக் கூட்டத்தில் அவர் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடருக்கு வேண்டாம் என வெளிப்படையாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் தென்னாப்பிரிக்க தொடரின் போது மூன்று ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பும்ரா பெரிதளவு விக்கெட்டுகளை எடுக்காமல் அதிகமாக ரன்களை கசிய விட்டுள்ளார்.

bumrah 1

இதன் காரணமாக தற்போது பும்ரா உறுதியான மனநிலையுடன் இல்லை என்பதனால் அவருக்கு தற்போது ஓய்வு மிகவும் அவசியம் என்பதால் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் இலங்கை தொடரில் அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று ரோஹித் சர்மா செலக்ஷன் மீட்டிங்கில் பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க இந்தியா வந்து விளையாடனுனா மொதல்ல இதை பண்ணுங்க – பி.சி.சி.ஐ யிடம் கண்டிஷன் போட்ட இலங்கை

மேலும் அதே போன்று அணியின் சீனியர் வீரர்களான அஷ்வின் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரும் இந்த தொடரில் இடம் பெறமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா மற்றும் ராகுல் சாகர் ஆகியோரை அணியில் எடுக்க ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement