அரைசதம் கடந்தும் தடுமாற்றம் குறையல! மோசமான சாதனை படைத்த விராட் கோலி – ரசிகர்கள் ஏமாற்றம்

Virat Kohli Bowled
- Advertisement -

அசத்தலாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கோலாகலமாக மும்பை நகரில் பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் முதல் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற முனைப்புடன் புதிய கேப்டன் டுப்லஸ்ஸிஸ் தலைமையில் புத்துணர்ச்சியாக விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்று விடலாம் என்ற நல்ல நிலைமையில் அந்த அணி உள்ளது பெங்களூரு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

maxwell

- Advertisement -

அந்த வகையில் நேற்று தனது 9-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை எதிர்கொண்ட அந்த அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியை சுவைத்தது. புனேவில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 173/8 ரன்கள் சேர்த்தது.

அசத்திய பெங்களூரு:
அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் டுப்லஸ்ஸிஸ் ஆரம்பத்திலேயே அதிரடியாக 38 (22) ரன்கள் எடுக்க நடு வரிசையில் மஹிபால் லோம்ரோர் 42 (27) ரஜத் படிடார் 21 (15) என இளம் வீரர்கள் தேவையான முக்கிய ரன்களை அதிரடியாக எடுத்தனர். இறுதியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்டு 26* (17) ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் கொடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் மகேஷ் தீக்சனா 3 விக்கெட்டுகளையும் மொயீன் அலி 2 விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.

Hasaranga Moin Ali

அதை தொடர்ந்து 174 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு நம்பிக்கை நட்சத்திரம் ருதுராஜ் கைக்வாட் 28 (23) ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டான நிலையில் ராபின் உத்தப்பா 1 (3) அம்பத்தி ராயுடு 10 (8) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் டேவோன் 57 (37) ரன்களும் மிடில் ஆர்டரில் மொய்ன் அலி 34 (27) ரன்களும் எடுத்து வெற்றிக்கு போராடிய போதிலும் கடைசி நேரத்தில் ரவீந்திர ஜடேஜா 3 (5) எம்எஸ் தோனி 2 (3) என நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அதனால் 20 ஓவர்களில் 160/8 ரன்களை மட்டுமே எடுத்து அந்த அணி 10 போட்டிகளில் 7-வது தோல்வியை பதிவு செய்து லீக் சுற்றுடன் வெளியேறுவதை 100% உறுதிப்படுத்திக் கொண்டது.

- Advertisement -

தடுமாறும் கோலி:
இந்த போட்டியில் பெங்களூரு வெற்றி பெற்றாலும் கூட அதன் நட்சத்திர வீரர் விராட் கோலி தொடர்ந்து ரன்கள் எடுக்க முடியாமல் சுமாரான பார்மில் நீடிப்பது அந்த அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் கவலையளிக்கும் அம்சமாக உள்ளது. குறிப்பாக கேப்டன் டுப்லஸ்ஸிஸ் உடன் தொடக்க வீரராக களமிறங்கி 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 33 பந்துகளில் வெறும் 30 ரன்களை 90.91 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்து “நான் இன்னும் முழு பார்முக்கு திரும்பவில்லை” என்று மீண்டும் நிரூபித்துள்ளார்.

Virat Kohli Golden Duck

கடந்த 2019க்கு பின்பு டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக 104 போட்டிகளாக சதமடிக்க முடியாமல் திணறி வரும் அவர் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருட ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டாகி உச்சகட்ட பார்ம் அவுட்டில் இருக்கிறேன் என்று வெளிப்படையாக காட்டினார். அதிலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ள அவர் இந்த வருடம் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் தவித்து வந்த நிலையில் ஒரு வழியாக குஜராத்துக்கு எதிரான போட்டியில் அதுவும் 53 பந்துகளில் மெதுவாக விளையாடி 58 ரன்களை எடுத்து ஓரளவு பார்முக்கு திரும்பி விட்டதாக காட்டினார்.

- Advertisement -

க்ளீன் போல்ட்:
ஆனால் மீண்டும் நேற்றைய போட்டியில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 2019க்கு பின்பு 3 வருடங்களாக தொடர்ச்சியாக தடுமாற்றத்தில் இருப்பது அவரின் ரசிகர்களையே ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. முன்னதாக நேற்றைய போட்டியில் 30 ரன்கள் எடுத்திருந்த போது சென்னை பவுலர் மொயீன் அலி வீசிய சுழல் பந்து வீச்சில் சிக்கிய விராட் கோலி கிளீன் போல்டாகி வழக்கம் போல அதிர்ச்சி நிறைந்த முகத்துடன் ஏமாற்றம் அடைந்து தலையை தொங்க போட்டுக்கொண்டே பெவிலியன் திரும்பினார்.

இதையும் படிங்க : CSKvsRCB : பரப்பான போட்டிக்கு மத்தியில் மலர்ந்த காதல். இம்முறை ரசிகர்கள் – என்ன நடந்தது?

அந்த வகையில் “ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கிளீன் போல்டாகி அவுட்டான பேட்ஸ்மேன்” என்ற மோசமான சாதனையையும் நேற்றைய போட்டியில் விராட் கோலி படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 36*
2. ஷிகர் தவான் : 35
3. ஷேன் வாட்சன் : 35
4. மனிஷ் பாண்டே : 29

Advertisement