CSKvsRCB : பரப்பான போட்டிக்கு மத்தியில் மலர்ந்த காதல். இம்முறை ரசிகர்கள் – என்ன நடந்தது?

Fans Love Proposal In IPL
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் நாக் – அவுட் சுற்றுக்கு தகுதி பெற கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் லீக் சுற்றில் மிக சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்க நிறைய அணிகள் கடுமையாக போட்டி போட்டு வருகின்றன. அந்த வகையில் மே 4-ஆம் தேதி நடைபெற்ற 49-வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னையை 13 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வ வைத்த பெங்களூரு 7-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதியாக தக்க வைத்துக் கொண்டுள்ளது. புனேவில் விறுவிறுப்புடன் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 173/8 ரன்கள் எடுத்தது.

cskvsrcb

- Advertisement -

அந்த அணிக்கு அதிகபட்சமாக மஹிபால் லோம்ரோர் 42 (27) கேப்டன் டு பிளேஸிஸ் 38 (22) விராட் கோலி 30 (33) ரஜத் படிடார் 21 (15) போன்ற வீரர்கள் தேவையான ரன்களை எடுக்க இறுதியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக 26* (17) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார். சென்னை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக மகேஷ் தீக்சனா 3 விக்கெட்டுகளையும் மொயின் அலி 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

பெங்களூரு சிறப்பான வெற்றி:
அதை தொடர்ந்து 174 எடுத்தால் வெற்றி இன்றைய இலக்குடன் களமிறங்கிய சென்னைக்கு தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் 28 (23) ரன்கள் டேவோன் கான்வே 56 (37) ரன்கள் என 54 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த ராபின் உத்தப்பா 1 (3) அம்பத்தி ராயுடு 10 (8) போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தி நிலையில் நடுவரிசையில் மொயின் அலி அதிரடியாக 34 (27) ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடி அவுட்டானார்.

Hasaranga Moin Ali

ஆனால் கடைசி 5 ஓவர்களில் 56 ரன்கள் தேவைப்பட்ட போது ரவீந்திர ஜடேஜா 3 (5) எம்எஸ் தோனி 2 (3) என முக்கிய நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 160/8 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னை பரிதாபமாக தோற்றது. பெங்களூர் சார்பில் 3 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய ஹர்ஷல் படேல் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த தோல்வியால் பங்கேற்ற 10 போட்டிகளில் 7-வது தோல்வியை பதிவு செய்த சென்னை லீக் சுற்றுடன் வெளியேற தயாராகியுள்ளது.

- Advertisement -

ஆர்சிபி ரசிகருக்கு லக்:
இந்த போட்டியில் 2020க்கு பின் அதாவது 2 வருடங்கள் கழித்து சென்னையை முதல் முறையாக பெங்களூரு தோற்கடித்தது அந்த அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக அமைந்தது. அதன் காரணமாக இந்த வருடம் புதிய கேப்டன் டுப்லஸ்ஸிஸ் தலைமையில் எப்படியாவது முதல்முறையாக கோப்பையை முத்தமிட்டு விடலாம் என்ற புத்துணர்ச்சி அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. அப்படி மகிழ்ச்சி வெள்ளத்தில் நேற்றைய போட்டியை புனே மைதானத்தில் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெங்களூரு ரசிகருக்கு மேலும் ஒரு அதிர்ஷ்டமாக அவரின் காதலி வெளிப்படையாகவே காதலை வெளிப்படுத்தி சொர்க்கத்தில் மிதப்பது போன்ற உணர்வை கொடுத்தார்.

சமீப காலங்களாகவே கிரிக்கெட் மைதானத்தில் பல ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னிலையில் இது போன்ற காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி அவர்களின் பாராட்டுகளுடனும் ஆசீர்வாதத்துடனும் காதலர்களாக இணைவது வாடிக்கையாகி வருகிறது. அது போன்ற செயல்களை ரசிகர்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னையின் நட்சத்திர வீரர் தீபக் சாஹர் தனது காதலிக்கு மோதிரத்தை பரிசாக அளித்து காதலை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களுடன் ஒன்று சேர்ந்தது யாரும் மறந்திருக்க முடியாது.

- Advertisement -

அந்த வகையில் பெரும்பாலும் இது போன்ற தருணங்களில் காதலர் தான் தனது காதலிக்கு மோதிரத்தை பரிசளித்து காதலை வெளிப்படுத்தி வந்தார்கள். ஆனால் நேற்றைய போட்டியில் அவை அனைத்திற்கும் விதிவிலக்காக ஒரு பெண் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து தனது காதலனுக்காக அத்தனை பேர் மத்தியில் மோதிரத்தை பரிசளித்து காதலை வெளிப்படுத்தியது அனைவரையும் வியக்க வைத்தது.

இதையும் படிங்க : 15 வருஷமா நான் ஆர்.சி.பி அணிக்காக மட்டுமே விளையாட இதுமட்டும்தான் காரணம் – மனம்திறந்த கோலி

மொத்தத்தில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னையை பெங்களூரு வென்றது போல அதே பெங்களூர் அணியின் ரசிகர் ஒரு பெண்ணின் மனதை வென்றுவிட்டார் என்று முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் இதுபற்றி தனது ட்விட்டரில் கலகலப்பாக பதிவிட்டுள்ளார்.

Advertisement