3 ஆவது அம்பயர் செய்த தவறு. இப்படியா பண்ணுவீங்க – கோவத்தில் கத்திய கோலி, அஷ்வின் – நடந்தது என்ன?

Drs
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் மூன்று நாட்கள் போட்டி முடிவடைந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 212 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தங்களது கடைசி இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்க அணியானது ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை அடித்துள்ளது. இதன் காரணமாக மேலும் 111 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் தென்ஆப்பிரிக்க அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் இல்லையெனில் 8 விக்கெட்டுகளை இந்திய அணி வீழ்த்தினால் இந்திய அணி வெற்றி பெறும் எப்படியாக இருந்தாலும் இந்த போட்டியில் முடிவு கிடைப்பது உறுதி.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் மைதானத்தில் அம்பயருக்கு எதிராக ஆவேசமாக பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி நேற்றைய போட்டியின் போது தென்ஆப்பிரிக்கா அணி தங்களது 2-வது இன்னிங்சை விளையாட களமிறங்கியது. அதில் துவக்க வீரர் மார்க்ராம் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இருந்து வெளியேறிய நிலையில் கேப்டன் டீன் எல்கர் மற்றும் கீகன் பீட்டர்சன் ஆகியோர் தொடர்ந்து விளையாடினார்கள்.

- Advertisement -

அப்போது 22 ரன்கள் எடுத்திருந்தபோது டீன் எல்கர் அஷ்வினின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதற்கு மைதானத்தில் இருக்கும் அம்பயரும் அவுட் என்று அறிவிக்கவே அனைவரும் உற்சாகம் அடைந்தனர். ஆனால் டீன் எல்கர் டிஆர்எஸ் முடிவுக்கு சென்றார். அப்போது மூன்றாவது நடுவர் பந்தை ரீபிளேவில் பார்க்கும் போது பந்து ஸ்டம்பிற்கு மேல் சென்றதால் அவுட் இல்லை என்று அறிவித்தார். மூன்றாவது அம்பயரின் அந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் ஒரு ஸ்பின் பவுலர் வீசிய அந்த பந்து அவ்வளவு உயரமாக செல்ல வாய்ப்பே கிடையாது என்று இந்திய வீரர்கள் அனைவரும் கோபப்பட்டனர்.

மேலும் இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் அஷ்வின் அம்பயரிடம் சென்று இது போன்ற மிகப்பெரிய போட்டிகளில் வெல்ல வேண்டும் என்றால் வேறு நல்ல வழி இருந்தால் பாருங்கள் என்று சாடினார்.

- Advertisement -

அதேபோல கேப்டன் விராட் கோலியும் ஸ்டம்பிற்கு அருகில் சென்று குனிந்தவாறு உங்கள் அணியினரும் அவ்வப்போது பந்தை சேதப்படுத்துகின்றனர். அதையும் கொஞ்சம் பாருங்கள் எதிரணியை மட்டும் பார்க்க வேண்டாம். எப்போதும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று விரக்தியில் சில வார்த்தைகளை கூறினார்.

இதையும் படிங்க : என்னையா சொல்றிங்க! 145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்த சம்பவம்

இந்த விக்கெட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மைதானத்தில் இருந்த அனைவரும் திகைத்து நின்றனர். பின்னர் நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டதால் மீண்டும் போட்டி தொடர்ந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement