என்னையா சொல்றிங்க! 145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்த சம்பவம்

RSA
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா – இந்தியா ஆகிய அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றதால் 1 – 1* என இந்ததொடர் சமனில் உள்ளது, இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் இந்த தொடரின் முக்கிய 3வது போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இந்திய கேப்டன் விராட் கோலி காயத்திலிருந்து குணமடைந்து திரும்பி இந்த போட்டியில் டாஸ் வென்ற அவர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

INDvsRSA

- Advertisement -

தனி ஒருவன் கோலி:
இதை அடுத்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவிற்கு நல்ல பார்மில் இருந்த தொடக்க வீரர் ராகுல் ஏமாற்ற புஜாரா 43 ரன்கள் எடுத்தார். அடுத்த வந்த வீரர்களில் விராட் கோலி மட்டும் நிலைத்து நின்று தனி ஒருவனாக பேட்டிங் செய்து 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்ட இந்தியா 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதன்பின் தங்களின் முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்காவிற்கு சவால் அளிக்கும் வகையில் அதிரடியாக பந்துவீசிய இந்திய பவுலர்கள் அந்த அணியை வெறும் 210 ரன்களுக்கு சுருட்டினர். அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவின் கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்தார், இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்கள் சாய்த்தார்.

kohli 1

மோசமான பேட்டிங்:
இதை அடுத்து 13 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2வது இன்னிங்ஸ்சிலும் தென் ஆப்பிரிக்காவின் அதிரடியான வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 198 ரன்களுக்கு பரிதாபமாக சுருண்டது. அதிகபட்சமாக கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் விளாசி போராடிய ரிஷப் பண்ட் 100* ரன்கள் விளாசினார்.

- Advertisement -

இதை அடுத்து 212 ரன்கள் எடுத்தால் சொந்த மண்ணில் வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றி கோப்பையை வெல்ல முடியும் என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா தனது 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

pant 1

145 ஆண்டுகளில்:
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்த போட்டியில் ஒரு அரிதினும் அரிதான சாதனை நிகழ்ந்துள்ளது, அதாவது இந்த போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் “20 விக்கெட்டுகளையும் கேட்ச்களின் வாயிலாக இந்தியா இழந்தது”. இதன் வாயிலாக “டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அனைத்து 20 விக்கெட்டுகளையும் கேட்ச்கள் வாயிலாக இழந்த முதல் அணி” என்ற பரிதாபத்திற்கு இந்தியா உள்ளாகியுள்ளது.

இதையும் படிங்க : தரமான சதத்தை விளாசி தோனியை முந்தி சாதனை மேல் சாதனை படைத்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ

கடந்த 1877 முதல் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இது போன்றதொரு நிகழ்வு இதற்கு முன்பு எப்போதுமே நடந்தது கிடையாது. ஆனால் தற்போது 145 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக இதுபோன்றதொரு சாதனை நிகழ்ந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Advertisement