இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலககோப்பை அரையிறுதி போட்டியின் போது இந்திய அணிக்காக கடைசியாக டி20 போட்டியில் விளையாடியிருந்தார். அதனை தொடர்ந்து கடந்த 14 மாதங்களுக்குப் பிறகு ஜனவரி 14-ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போது தான் டி20 அணிக்கு திரும்பியிருந்தார்.
அப்படி மீண்டும் டி20 போட்டிக்கு திரும்பிய விராட் கோலி இரண்டாவது போட்டியில் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை என்றாலும் மூன்றாவது போட்டியின் போது அவரது பிரமாதமான ஆட்டம் வெளிப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இவ்வேளையில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இந்த மூன்றாவது டி20 போட்டியில் விராட் கோலி மாபெரும் சாதனை ஒன்றினை படைக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் உலக அளவில் அந்த சாதனையை படைக்கப்போகும் நான்காவது வீரராகவும், இந்தியா சார்பில் முதல் வீரராகவும் விராட் கோலி அந்த சாதனையை நிகழ்த்தப்போகிறார் என்பதும் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் விராட் கோலி 6 ரன்களை அடிக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் போட்டிகளில் 12000 ரன்களை பூர்த்தி செய்த நான்காவது உலகளாவிய வீரர் என்பது மட்டுமின்றி இந்திய அளவில் முதல் வீரராகவும் சாதனையை நிகழ்த்துவார். இதுவரை விராட் கோலி ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 11994 ரன்கள் குவித்து நான்காவது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : நான் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதற்கு காரணமே அவர்தான் – ஷிகர் தவான் நெகிழ்ச்சி
நிச்சயம் அவர் ஓய்வு பெறுவதற்குள் 15,000 அல்லது 16000 ரன்களை குவிப்பார் என்றும் நம்பலாம். இந்த பட்டியலில் கிறிஸ் கெயில், சோயிப் மாலிக், கைரன் பொல்லார்டு ஆகியோர் ஏற்கனவே 12000 ரன்களை கடந்துள்ள வேளையில் நான்காவது வீரராக விராட் கோலி இந்த பட்டியலில் இணையுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த நான்கு வீரர்களின் அதிக சராசரியுடன் விரைவாக 12000 ரன்களை குவித்த வீரராகவும் அவர் சாதனை படைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.