நான் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதற்கு காரணமே அவர்தான் – ஷிகர் தவான் நெகிழ்ச்சி

Dhawan
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ துவக்க வீரரான ஷிகர் தவான் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 167 ஒருநாள் போட்டிகள், 34 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் 217 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். அதோடு பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

38 வயதான ஷிகர் தவானுக்கு வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தன்னால் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என்ற முனைப்புடன் அவர் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடியதற்கு காரணம் ரோஹித் சர்மா தான் வெளிப்படையாக சில கருத்துக்களை பேசியுள்ளார். அந்த வகையில் ஷிகர் தவான் கூறியதாவது : நானும் ரோகித்தும் பல ஆண்டுகள் ஒன்றாக இணைந்து விளையாடி உள்ளோம்.

அவர் எதிர்புறத்தில் இருந்து எனக்கு கொடுக்கும் ஆதரவு தான் நான் நன்றாக பேட்டிங் செய்ய காரணமாக இருந்தது. மேலும் ஒவ்வொரு போட்டியிலும் பெரிய ஸ்கோரை எவ்வாறு அடிப்பது? பெரிய ஸ்கோரை எவ்வாறு சேசிங் செய்வது என்பது குறித்து ரோஹித் நிறையவே எனக்கு ஆலோசனைகள் வழங்குவார்.

- Advertisement -

ரோகித்தின் ஆதரவு தான் என்னுடைய இந்த சிறப்பான செயல்பாடுகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது. இதற்காக நான் ரோகித்திற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து விளையாடியதிலேயே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மொகாலியில் நடந்த போட்டியில் 193 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்தோம். அதனை எனது மறக்கமுடியாத சிறப்பான ஒரு ஆட்டமாக பார்க்கிறேன்.

இதையும் படிங்க : பாகிஸ்தானை பொளந்தோம்.. எப்போவும் இல்லாத வெறித்தனம் இருக்கு.. இந்தியாவை எச்சரித்த ஆண்டர்சன்

மேலும் 2018-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் நாங்கள் இருவரும் 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அதுபோன்ற சில மறக்க முடியாத நினைவுகள் ரோகித்துடன் இருந்துள்ளன என ஷிகர் தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement