ஒன்னு இல்ல. ரெண்டு இல்ல. பல உலககோப்பைகளை இந்திய அணி ஜெயிக்கனும் – இந்திய வீரரின் ஆசை

Rahul-2
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணி தற்போது அரையிறுதி வாய்ப்புக்காக மற்ற அணிகளை நம்பியிருக்க வேண்டிய நிலையில் உள்ளது. மேலும் ஐபிஎல் தொடரும் அங்கேயே நடைபெற்றதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

IND

- Advertisement -

ஆனால் சூப்பர் 12-சுற்றின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்ததால் ரன் ரேட்டிலும் இந்திய அணி பெரிய அடி வாங்கியது.

அதன் பின்னர் தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே சிறப்பான வெற்றியை இந்திய அணி பெற்றதால் தற்போது ஒரு சிறு நம்பிக்கை இந்திய அணியிடம் தென்பட்டுள்ளது. முக்கியமான நாளைய போட்டியில் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற ஒரு வாய்ப்பு உள்ளது. மற்றபடி இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது கேள்விக்குறிதான்.

rahul

இந்நிலையில் ஐசிசி-யின் ட்விட்டர் பக்கத்தில் பேட்டி ஒன்றினை அளித்துள்ள இந்திய அணியின் இளம் வீரரான ராகுல் தனது சிறுவயது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது அதனை பார்த்து ரசித்தேன். பின்பு நானும் ஒருநாள் இந்திய அணிக்காக விளையாடி கோப்பைகளை வென்று தர வேண்டும் என்ற லட்சியம் எனக்குள் உருவானது.

- Advertisement -

இதையும் படிங்க : அது மட்டும் நடந்த மூட்டை முடிச்ச கட்ட வேண்டியதுதான். பத்திரிகையாளர் சந்திப்பில் – ஜடேஜா வெளிப்படை

அதுவும் ஒன்று, இரண்டு அல்ல பல உலக கோப்பைகளை வென்று கொடுத்து சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்தேன். மேலும் இனி வரும் காலங்களிலும் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவுவேன் என ராகுல் தனது கருத்தை தெரிவித்திருந்தார். ஸ்காட்லாந்து அணிக்கெதிரான முக்கியமான போட்டியில் 7.1 ஓவரில் 86 ரன்களை சேசிங் செய்ய வேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் 18 பந்துகளில் அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement