அவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது எனக்கே தெரியாது. யோசிப்பதும் கிடையாது – கே.எல் ராகுல் வெளிப்படை

KL-Rahul
- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் வங்கதேச அணியிடம் இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 14-ஆம் தேதி இன்று சட்டகிராம் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

IND-vs-BAN

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியில் காயம் காரணமாக ரோகித் சர்மா விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக ஜெயதேவ் உனட்கட்டும், ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக சௌரவ் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் கேப்டனாக ரோகித் சர்மா விளையாட முடியாமல் போனதனால் கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அவருக்கு பதிலாக அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாராவை இந்திய அணியின் நிர்வாகம் துணை கேப்டனாக நியமித்துள்ளது. அவரது இந்த நியமனம் தற்போது ட்விட்டரில் ரசிகர்கள் மத்தியில் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pujara 1

ஏனெனில் சீனியர் வீரரான புஜாரா தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் பொழுது அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கியது ஏன்? என்றும், ரிஷப் பண்டை இந்திய அணி தொடர்ச்சியாக ஆதரவளித்து விளையாட வைத்து வரும்பொழுது வருங்கால கேப்டனாக பார்க்கப்படும் அவருக்கே துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : கேப்டன் பொறுப்பு மற்றும் துணை கேப்டன் பொறுப்பு ஆகியவை எதன் அடிப்படையில் எடுக்கப்படுகிறது என்று எனக்கு தெரியாது. யாருக்கு எந்த பொறுப்பு கிடைத்தாலும் நமக்கு நாமே தட்டிக் கொள்ள வேண்டியதுதான். அனைவருக்கும் அவரவர் பொறுப்பு என்னவென்று தெரியும்.

இதையும் படிங்க : IND vs BAN : எல்லாம் வாய் உருட்டு தான், செயலில் ஒன்னுமில்ல – நட்சத்திர இந்திய வீரரை கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் என்ன

அந்த வகையில் ரிஷப் பண்ட் மற்றும் புஜாரா ஆகிய இருவருமே சிறப்பான பங்களிப்பை அளித்தாலும் தற்போது இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகம் என்ன யோசிக்கிறார்கள் என்பது குறித்து நாம் சிந்திக்க முடியாது. எனவே இதையெல்லாம் நாங்கள் அதிகம் யோசிப்பதில்லை. ஒரு அணியாக சிறப்பாக விளையாடி வெற்றியை பெற வேண்டும் என்பது மட்டுமே எங்களது நோக்கமாக உள்ளது என கே.எல் ராகுல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement