IND vs BAN : எல்லாம் வாய் உருட்டு தான், செயலில் ஒன்னுமில்ல – நட்சத்திர இந்திய வீரரை கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் என்ன

KL Rahul
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்ட நிலையில் கடைசி போட்டியில் பிரம்மாண்ட வெற்றி பெற்று ஒயிட்வாஷ் அவமானத்தை தவிர்த்தது. அதைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்தியா 2 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது.

ஏனெனில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் தற்போது புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற இத்தொடரையும் அடுத்ததாக வரும் பிப்ரவரியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் வென்றாக வேண்டியுள்ளது. அந்த நிலைமையில் டிசம்பர் 14ஆம் தேதியன்று சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா என முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறிய நிலையில் துணை கேப்டன் ராகுல் இந்தியாவை வழி நடத்துகிறார். அவரது தலைமையில் பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு நிதானத்துடன் செயல்பட்ட இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் 20 (40) ரன்களில் தவறான ஸ்வீப் ஷாட் அடித்து அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் தடவிய கேப்டன் ராகுல் 22 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

வாய் உருட்டு மட்டுமே:
அதனால் 48/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்து வந்த ரிஷப் பண்ட் தமக்கே உரித்தான அதிரடி பாணியில் 4 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு 29* (26) ரன்களும் புஜாரா நங்கூரமாக 12* (32) ரன்களும் எடுத்ததால் முதல் நாள் உணவு இடைவெளியில் இந்தியா 85/3 ரன்கள் எடுத்தது. முன்னதாக இப்போட்டியில் கேப்டனாக செயல்படும் கேஎல் ராகுல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் வெல்ல வேண்டியது அவசியம் என்றும் அதற்கு இந்தியா அதிரடியாக விளையாட வேண்டும் என்றும் நேற்று தெரிவித்தார்.

- Advertisement -

குறிப்பாக என்ன ஆனாலும் அதிரடியை மட்டும் விடமாட்டோம் என்ற அணுகுமுறையுடன் விளையாடி பாகிஸ்தானில் சரித்திரம் படைத்துள்ள இங்கிலாந்தை விட இந்தியா தங்களது ஸ்டைலில் அதிரடியாக விளையாடும் என்று அவர் பேசியிருந்தார். ஆனால் சாதாரண வீரராக சமீப காலங்களில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுதுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர் சமீபத்திய டி20 உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் இந்தியா தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்தார்.

இருப்பினும் இப்போட்டிக்கு முன்பாக தன்னம்பிக்கையுடன் தைரியமாக பேசியதால் ஒருவேளை கேப்டனாக அவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவாரோ என்ற ஆர்வமடைந்த ரசிகர்கள் உற்சாகமடைத்தனர். ஆனால் வாயில் வீரமாக பேசிய அவர் களத்தில் கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் அதே தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 54 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 22 ரன்களை 40.74 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து எட்ஜ் வாங்கி தன்னைத்தானே கிளீன் போல்ட்டாக்கி பெவிலியன் திரும்பினார். அதை பார்த்த ரசிகர்கள் எல்லாமே வாய் உருட்டு மட்டும் தான் களத்திலும் செயலிலும் இவர் எப்போதுமே அதிரடி காட்ட மாட்டார் என்று சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: IND vs BAN : டாஸ் வென்று இந்திய அணி எடுத்த வித்தியாசமான முடிவு. டாசுக்கு பிறகு கேப்டன் ராகுல் – பேசியது என்ன?

ஏனெனில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி காண்பதற்கு உணவு இடைவெளிக்கு முன்பாக 150 – 200 ரன்களை அடித்து நொறுக்கியதே முக்கிய காரணமாக அமைந்தது. அந்த வகையில் ராகுல் மட்டுமல்லாமல் இதர இந்திய வீரர்களும் அதிரடியை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்களாகவே உள்ளனர். ஆனால் 29* (26) ரன்களை விளாசி அதற்கு விதிவிலக்காக நிற்கும் ரிஷப் பண்ட் மட்டுமே இப்போட்டி மட்டுமல்லாமல் ஆரம்பம் முதலே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான அணுகு முறையுடன் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement