INDvsPAK : போன வருஷம் நடந்தத மறக்க முடியல. கண்டிப்பா பதிலடி குடுப்போம் – கே.எல் ராகுல் அதிரடி பேட்டி

Rahul
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரானது இன்று ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது.

INDvsPAK

- Advertisement -

இந்நிலையில் இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ள வேளையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வது குறித்து இந்திய அணியின் துவக்க வீரரும், துணை கேப்டனுமான கே.எல் ராகுல் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான நாளைய போட்டியில் விளையாட நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

இது போன்ற பொதுவான தொடர்களில் மட்டுமே பாகிஸ்தான் அணியை நாங்கள் எதிர்கொள்கிறோம். எனவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருப்பது உற்சாகமாக இருக்கிறது. அதோடு இந்த தொடரில் அவர்களுக்கு எதிராக நமக்கு நாமே சவால் விடவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

shaheen afridi

கடந்த முறை டி20 உலக கோப்பை தொடரின் போது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று தொடரினை சிறப்பாக ஆரம்பிக்க நினைத்தோம். ஆனால் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்ததை நினைத்து இன்னும் எனக்கு வருத்தம் அளிக்கிறது. நிச்சயம் நாளைய போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை துவங்க நினைக்கிறோம்.

- Advertisement -

கடந்த முறை பாகிஸ்தான் அணியிடம் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் ஒருமுறை அவர்களை எதிர்த்து விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே நாளைய போட்டியில் வெற்றி பெற்று தொடரினை வெற்றிகரமாக துவங்குவோம் என கே.எல் ராகுல் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் விராட் கோலி குறித்து பேசிய அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : பாகிஸ்தானுக்கு எதிரான உத்தேச 11 பேர் இந்திய அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர் – முழு அணி இதோ

விராட் கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர் வெளியே இருந்து வரும் கருத்தால் பாதிக்கப்பட மாட்டார். அவருக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்துள்ளது. நிச்சயம் அவர் தனது விளையாட்டில் கவனம் செலுத்தி மிகச் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்புவார் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement