பாகிஸ்தானுக்கு எதிரான உத்தேச 11 பேர் இந்திய அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர் – முழு அணி இதோ

Dinesh Karthik Ashwin
- Advertisement -

வரலாற்றின் 15ஆவது ஆசிய கோப்பை ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்குகிறது. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்ல நடப்புச் சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன. இந்த தொடரில் 6 அணிகள் மோதினாலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு தான் உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

INDvsPAK

- Advertisement -

ஏனெனில் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்ற நிலைமையில் கடைசியாக இதே துபாயில் இவ்விரு அணிகளும் மோதிய போது வரலாற்றில் முதல் முறையாக உலக கோப்பையில் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் சரித்திரத்தை மாற்றியது. எனவே அதற்கு இம்முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தக்க பதிலடி கொடுக்குமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாகும். அனல் பறக்கப்போகும் இப்போட்டிக்காக இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் துபாயில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தேச அணி:
மேலும் கடந்த முறை அவமானம் நிறைந்த வரலாற்று தோல்வியை சந்தித்ததால் இம்முறை எப்படியாவது வென்றே தீரவேண்டும் என்ற அழுத்தத்தில் இந்தியா களமிறங்க உள்ளது. அதற்கு விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் எந்தவித குழப்பமும் இல்லாமல் தரமான வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. அதில் கேஎல் ராகுல் காயத்திலிருந்து திரும்பினாலும் பழைய பார்மில் இருக்கிறாரா என்பது சந்தேகமாக இருப்பதால் தொடக்க ஜோடியை தீர்மானிப்பதில் தயக்கம் நிலவுகிறது.

Dinesh Karthik 1

அதேபோல் மிடில் ஆர்டரில் பினிஷிங் செய்வதற்காக மட்டும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யக்கூடாது, துல்லியமாக பந்து வீசினாலும் விக்கெட்டுகளை எடுக்க தடுமாறும் அஷ்வினுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்ற பேச்சுக்களும் இருக்கின்றன. அத்துடன் ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ள நிலையில் புவனேஸ்வர் குமாருடன் வெற்றியை பெற்று கொடுக்கும் பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வியும் நிலவுகிறது.

- Advertisement -

டிகே, அஷ்வின் இல்லை:
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடி வெற்றியைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய சிறந்த 11 பேர் உத்தேச இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம் தேர்வு செய்துள்ளார். அதில் தமிழக வீரர்களான அஷ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யாத அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “என்னுடைய டாப் ஆர்டரில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் இருப்பார்கள். ஆசிய கோப்பை போன்ற முக்கிய தொடரில் பாகிஸ்தான் போன்ற அணிக்கு எதிரான பெரிய போட்டியில் அனுபவத்தை நான் மதிக்கிறேன். எனவே விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் ஒருசில மணி நேரங்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டாலே ஃபார்முக்கு திரும்பி விடுவார்கள்”

Ravichandran Ashwin

“சூரியகுமார் யாதவ் பன்முகம் கொண்டவர். ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் 7 அல்லது 8வது ஓவர் வரை பேட்டிங் செய்தால் அவரை முன்கூட்டியே களமிறக்குவேன். தேவைப்பட்டால் கீழ் வரிசையிலும் களமிறக்குவேன். ஏனெனில் போட்டியின் அனைத்து சூழ்நிலைகளிலும் எந்த இடத்திலும் சிறப்பாக விளையாடும் திறமை அவரிடமுள்ளது. 4, 5, 6 ஆகிய இடங்களில் மாறி மாறி விளையாட கூடியவர்களை தேர்வு செய்வேன்”

- Advertisement -

“அந்த வகையில் தேவைப்பட்டால் இடது கை பேட்ஸ்மேனான ரிசப் பண்டை அனுப்புவேன். என்னுடைய 11 பேர் அணியில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருப்பதால் ஒரு விக்கெட் கீப்பரை மட்டும் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. அதனால் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யும் நிலைமை ஏற்படுகிறது. அந்த நிலைமையில் ரிஷப் பண்ட் துருப்பு சீட்டு வீரர் என்பதால் அவரை நான் தேர்வு செய்கிறேன்”

Karim

“அதேபோல் அஷ்வின் 15 பேர் அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் எதிரணியில் 4 – 5 இடதுகை பேட்ஸ்மென்கள் இருந்தால் மட்டுமே அவரை நான் தேர்வு செய்வேன். ஆனால் இந்த போட்டியில் விக்கெட் எடுப்பவராக சஹாலை நான் தேர்வு செய்தேன். அதேபோல் லோயர் ஆர்டரில் நல்ல ரன்கள் எடுக்கக்கூடிய ரவீந்திர ஜடேஜாவை 2வது சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்வேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க : தமிழ் திரைப்படத்தில் நடிகராக அறிமுகவுள்ள இந்திய வீரரை மனதார பாராட்டிய சுரேஷ் ரெய்னா – வைரல் பதிவு

சபா கரீம் தேர்வு செய்துள்ள பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய உத்தேச 11 பேர் அணி இதோ:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வென்ற சஹால், புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் சிங், ஆவேஷ் கான்

Advertisement