தமிழ் திரைப்படத்தில் நடிகராக அறிமுகவுள்ள இந்திய வீரரை மனதார பாராட்டிய சுரேஷ் ரெய்னா – வைரல் பதிவு

Raina CSK Whistle
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பொதுவாக 33 வயதை எட்டியதும் அடுத்து வரும் ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு இறுதி கட்டத்தை போன்று தான் இருக்கும். ஏனெனில் சீனியர் வீரர்களான அவர்களை வயதினை முன்னிலைப்படுத்தி அணியிலிருந்து ஓரங்கட்ட நினைப்பார்கள். அதே வேளையில் சீனியர் வீரர்களும் தங்களது பார்மை இழந்தவுடன் தானாக முன்வந்து ஓய்வினை அறிவிப்பார்கள் அந்த வகையில் பல இந்திய வீரர்கள் ஓய்விற்கு பிறகு சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளனர்.

அந்த வகையில் கடந்த 2003-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2012-ஆம் ஆண்டு வரை விளையாடிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் தற்போது தனது 37-வது வயதில் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். 7 கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா.

- Advertisement -

இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக கே.ஜி.எஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் துருக்கி நாட்டைச் சேர்ந்த இன்டர் போல் ஏஜென்ட்டாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் வேளையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரும் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள வேளையில் இந்த படத்திற்கான ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படத்தில் விக்ரம் பல கெட்டப்பில் நடித்துள்ளதாலும், இன்டர் போல் ஏஜென்ட்டாக இர்ஃபான் பதான் நடித்துள்ளதாலும் இந்த ட்ரெய்லர் வெளியானதுமே இணையத்தில் ஹிட்டடித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தன்னுடன் விளையாடிய சக வீரரான இர்ஃபான் பதானை பாராட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா பட குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது
: கோப்ரா படத்தில் உங்கள் நடிப்பை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது முழுக்க முழுக்க ஆக்ஷன் நிரம்பிய படம் போல் தெரிகிறது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை வரலாற்றின் ஃபைனல்களில் ஆட்டநாயகன் விருது வென்ற அனைத்து வீரர்களின் பட்டியல்

உங்களுடன் சேர்ந்து நடித்த அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த திரைப்படத்தை திரையரங்கில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். சுரேஷ் ரெய்னாவின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement