எங்கள் அணியின் தொடர் தோல்விகளுக்கு இதுவே காரணம் – வருத்தத்துடன் பேசிய கே.எல் ராகுல்

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 42-வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி துவக்கத்திலேயே 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனால் அவர்களால் பெரிய ரன் குவிப்புக்கு செல்ல முடியவில்லை. இருப்பினும் மார்க்ரம் 42 ரன்கள் மற்றும் தீபக் ஹூடா 28 ரன்கள் குவிக்க அவர்கள் ஓரளவு டீசன்ட்டான ரன் குவிப்பை கொடுத்தனர்.

mivspbks

- Advertisement -

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே அடித்தது. அதன் பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது துவக்கத்தில் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தாலும் பின்னர் வந்த நிலைத்து நின்று ஆடிய திவாரி 45 ரன்கள் குவித்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய ஹர்டிக் பண்டியா 30 பந்துகளில் 40 ரன்களும், பொல்லார்டு 7 பந்துகளில் 15 ரன்கள் குவித்து 19வது ஓவரில் மும்பை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்த மும்பை அணி இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

pandya

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் மும்பை அணிக்கு எதிராக கடுமையான போராட்டத்தை அளித்தோம். 135 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் போதுமான ரன்கள் கிடையாது. நிச்சயம் நாங்கள் 170 ரன்கள் வரை அடித்திருக்க வேண்டும். இருப்பினும் பந்துவீச்சாளர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ச்சியாக அளித்து வந்தனர்.

- Advertisement -

Pollard-3

இனி அடுத்து வரும் மூன்று போட்டிகள் நிச்சயம் ஐபிஎல் பட்டியலை சுவாரசியமாக்கும் என்பதனால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எங்களால் பிரஷரை ஹேண்டில் செய்ய முடியவில்லை. ஒரு அணியாக இன்னும் நாங்கள் நிறைய விளையாடினால் தான் எங்களால் அதை புரிந்து கொள்ள முடியும்.

இதையும் படிங்க : அவரிடம் அடிவாங்கியதுக்கு அப்புறம் தான் பார்முக்கே வந்தேன் – ஹார்டிக் பாண்டியா ஓபன்டாக்

இது போன்ற தோல்விகளில் இருந்து சில விடங்களை கற்றுக் கொள்கிறோம். அடுத்து மூன்று போட்டிகள் எங்களுக்கு உள்ளன. எனவே அதில் வெற்றி பெற முயற்சி செய்வோம் என ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement