அவரிடம் அடிவாங்கியதுக்கு அப்புறம் தான் பார்முக்கே வந்தேன் – ஹார்டிக் பாண்டியா ஓபன்டாக்

Pandya
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 42-ஆவது லீக் போட்டியில் நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இரு அணிகளுக்குமே முக்கியமான இந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 135 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

pandya

- Advertisement -

இந்த போட்டியில் மும்பை அணி பெற்ற வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் முன்னணி வீரரான ஹர்டிக் பாண்டியா திகழ்ந்தார். இந்த ஐபிஎல் தொடர் முழுவதுமே படுமோசமான பார்மில் இருந்த ஹார்டிக் பாண்டியா நேற்றைய போட்டியில் 30 பந்துகளை சந்தித்த நிலையில் 4 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 30 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

அதுமட்டுமின்றி இனி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் மும்பை அணிக்காக மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ள ஹார்டிக் பாண்டியா அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். நேற்றைய போட்டியில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த பாண்டியா மும்பை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

pandya 1

இந்நிலையில் தான் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாட ஷமி வீசிய ஒரு பந்தில் வாங்கிய அடி தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : முகமது ஷமி சிறப்பாக பந்து வீசினார். அவரது பவுன்சர் என்னை தாக்கும் பொழுது தான் நான் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன். அதன்பின்னர் பொல்லார்டு-டிடம் சென்று இந்த பந்து என்னை தட்டி எழுப்பியுள்ளது. நிச்சயம் நான் என்னுடைய பேட்டிங்கை சிறப்பாக செயல்படுத்த உள்ளேன் என்று கூறினேன்.

- Advertisement -

இதையும் படிங்க : இதை என்னால் மறக்கவே முடியாது. இது எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல் – ஆட்டநாயகன் பொல்லார்டு பேட்டி

அதற்கு முன்னர் வரை பந்து பேட்டில் படவே சற்று சிரமமாக இருந்தது. என்னால் பந்தினை சரியாக கனெக்ட் செய்ய முடியவில்லை. ஆனால் ஷமி வீசிய பந்து தாக்கியதற்கு பின்னர் நான் நிச்சயம் பந்துகளை அடிக்க வேண்டும் என்று 100% உறுதியாக இருந்தேன். எனவே அடுத்தடுத்த பந்துகளில் என்னால் விளாசவும் முடிந்தது என ஹார்டிக் பாண்டியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement