இதை என்னால் மறக்கவே முடியாது. இது எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல் – ஆட்டநாயகன் பொல்லார்டு பேட்டி

Pollard
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 42-வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி துவக்கத்திலேயே 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனால் அவர்களால் பெரிய ரன் குவிப்புக்கு செல்ல முடியவில்லை. இருப்பினும் மார்க்ரம் 42 ரன்கள் மற்றும் தீபக் ஹூடா 28 ரன்கள் குவிக்க அவர்கள் ஓரளவு டீசன்ட்டான ரன் குவிப்பை கொடுத்தனர்.

mivspbks

- Advertisement -

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே அடித்தது. அதன் பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது துவக்கத்தில் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தாலும் பின்னர் வந்த நிலைத்து நின்று ஆடிய திவாரி 45 ரன்கள் குவித்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய ஹர்டிக் பண்டியா 30 பந்துகளில் 40 ரன்களும், பொல்லார்டு 7 பந்துகளில் 15 ரன்கள் குவித்து 19வது ஓவரில் மும்பை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்த மும்பை அணி இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

pandya

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய ஆட்டநாயகன் கைரன் பொல்லார்டு கூறுகையில் : 300வது டி20 விக்கெட் வீழ்த்தியது மிக முக்கியமான தருணம். இந்த போட்டியில் நான் பந்துவீசிய தருணம் என்ன என்பது எனக்கு தெரியும். அந்த வகையில் நான் அணிக்காக சிறந்த பங்களிப்பை அளித்தது மகிழ்ச்சி.

- Advertisement -

pollard

நான் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியது மிகவும் ஸ்பெஷலானது, இதை என்னால் மறக்க முடியாது. எப்போதுமே பயிற்சி, பயிற்சி மற்றும் பேட்டிங் என செய்து கொண்டே இருக்கிறேன் எனது பந்துவீச்சில் வேகம், ஸ்விங், சீம் ஆகியவை இல்லை. ஆனால் என்னுடைய மூளையை பயன்படுத்தி சிறப்பாக பந்துவீசி வருகிறேன்.

இதையும் படிங்க : இந்த ஐ.பி.எல் தொடரோடு தோனி ரிட்டயர்டு ஆயிடுவாரு. ஏன் தெரியுமா ? – பிராட் ஹாக் சொன்ன விளக்கம்

இதில் முக்கியமான விடயம் எங்கள் அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. நிச்சயம் இந்த வெற்றி எங்கள் அணிக்கு ஒரு புத்துணர்வை தரும் என பொல்லார்டு கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement