இந்த ஐ.பி.எல் தொடரோடு தோனி ரிட்டயர்டு ஆயிடுவாரு. ஏன் தெரியுமா ? – பிராட் ஹாக் சொன்ன விளக்கம்

Hogg
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி இந்திய அணிக்காக மூன்று விதமான ஐசிசி கோப்பையையும் பெற்றுக் கொடுத்தவர். அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் தொடர்ந்து கேப்டனாக விளையாடி வரும் அவர் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார். இப்படி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத கேப்டனாக பார்க்கப்பட்டு வரும் தோனி 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பிறகு கடந்த ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார்.

Dhoni

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து தற்போது இரண்டு ஆண்டுகளாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இருப்பினும் 40 வயதான அவர் இன்னும் எவ்வளவு தூரம் விளையாடுவார் என்பதை சரியாகக் கூற முடியாது .அப்படி இருக்கையில் தற்போது 14வது ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் சென்னை அணி கிட்டதட்ட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. அதுமட்டுமின்றி கோப்பையை வெல்லும் அளவிற்கும் தற்போது சென்னை அணி வலுவாக உள்ளது.

இந்நிலையில் தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சிஎஸ்கே அணிக்காக தோனி நீண்டகாலம் கேப்டனாகவும், சிறந்த வீரராகவும் இருந்து இருக்கிறார். ஆனால் தற்போது 40 வயதான தோனி தனது பேட்டிங் திறனை முற்றிலும் இழுந்துவிட்டார்.

dhoni 3

இதன் காரணமாக அவர் நிச்சயம் ஐபிஎல் தொடரில் இருந்து விலக பெரிய வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது அவரின் கால் நகர்விற்கும் பேட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பார்க்கும்போது அவர் பார்ம் இழந்துவிட்டதாக கருதுகிறேன். 40 வயதான தோனி இனிமேல் விளையாட வாய்ப்பில்லை என்றும் அவர் இந்த ஆண்டுடன் ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தெரிகிறது என்று கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலிக்கு அடுத்து 2 உலகக்கோப்பை தொடருக்கு இவரே கேப்டனாக இருக்கனும் – சுனில் கவாஸ்கர் விருப்பம்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோன்று இந்த பதவியினால் நிச்சயம் சிஎஸ்கே அணியிலும் அவர் நிர்வாக ரீதியிலோ அல்லது பயிற்சியாளர் பதவிக்கு கூட அவர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. நிச்சயம் தோனியின் தலைமைப் பண்பு தற்போது சிஎஸ்கே அணியிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். இளம் வீரர்களை ஊக்குவித்து முன்னேற்றும் அவரது செயல் நிச்சயம் சிஎஸ்கே எனக்கு உதவியாக இருக்கும் என்றும் இந்த ஆண்டுக்கு பிறகு தோனியை சி.எஸ்.கே அணியில் பார்ப்பது கடினம் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement