விராட் கோலிக்கு அடுத்து 2 உலகக்கோப்பை தொடருக்கு இவரே கேப்டனாக இருக்கனும் – சுனில் கவாஸ்கர் விருப்பம்

gavaskar
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி இந்த மாத துவக்கத்தில் தான் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதால் அடுத்த கேப்டனாக யார் ? பதவி ஏற்பார்கள் என்ற கேள்வி அதிக அளவு எழுந்துள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் சீனியர் வீரரான ரோகித் சர்மா தான் டி20 அணிக்கு கேப்டன் பதவியில் நியமிக்கப்படுவார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Kohli

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை அளித்துள்ளார். அதில் இந்திய அணியின் அடுத்த கேப்டன் மற்றும் இரண்டு துணை கேப்டன்களுக்கான தனது கருத்தையும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நிச்சயம் என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா அடுத்த 2 டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும்.

ஏனெனில் தற்போதுள்ள சூழ்நிலையில் இந்திய அணியில் அடுத்தடுத்து கேப்டன்கள் மாற்றம் தேவையில்லாத ஒன்று. எனவே விராத் கோலிக்கு அடுத்து வரும் 2 டி20 உலகக் கோப்பைக்கு ரோகித் சர்மா மட்டுமே கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும். ஏனெனில் ரோகித் சர்மா விராட் கோலி இல்லாத சமயத்தில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தியுள்ளார். அவரது தலைமையில் பங்கேற்ற சில போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

Rohith-1

அதுமட்டுமின்றி நிதாஸ் டிராபி கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. அதோடு சேர்ந்து ஐபிஎல் தொடரிலும் அவர் ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியுள்ளதால் நிச்சயம் அடுத்து ரோகித் சர்மா தான் இந்திய அணியின் டி20 கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் துணை கேப்டன் பொறுப்பை பற்றி பேசிய அவர் : கே எல் ராகுல் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும்.

- Advertisement -

Rahul

ஏனெனில் அவர் தற்போது பஞ்சாப் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி அவரால் நீண்டகாலம் கேப்டன் பதவியை செய்ய முடியும் என்பதால் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்படுவது அவசியம் என்று கூறியுள்ளார். அதே வேளையில் இரண்டாவது துணை கேப்டனாக தனது தேர்வில் இருப்பவர் ரிஷப் பண்ட் என்று தெரிவித்துள்ளார். ரிஷப் பண்ட் குறித்து கூறுகையில் : டெல்லி அணியை இந்த ஆண்டு வழிநடத்தி வரும் ரிஷப் பண்ட் மிகச் சிறப்பாக கையாண்டு வருகிறார்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடரில் இவர் அதிசயங்களை நிகழ்த்துவார் – சி.எஸ்.கே வீரரை புகழ்ந்த ஆஷிஷ் நெஹ்ரா

வேகப்பந்து வீச்சாளர்கள் ரபாடா மற்றும் நோர்க்கியா ஆகியோரை மிகவும் சிறப்பாக தனது அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப அவர் பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் ரிஷப் பண்ட் மிகவும் ஸ்மார்ட்டான கேப்டன்சி செய்து வருகிறார் என்றும் சூழ்நிலையை உணர்ந்து அவர் ஸ்மார்ட்டாக கேப்டன்சி செய்து வருவதால் ராகுல் அல்லது பண்ட் ஆகிய இருவரில் ஒருவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்றும் தனது கருத்தினை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement