இவரை மாதிரி ஒரு பிளேயர வாங்க யாருக்கு தான் மனசு வராது. ஐ.பி.எல் ஏலத்துல இவர்தான் டாப் – ராகுல் பேட்டி

pbks
- Advertisement -

கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக இருந்த கே.எல் ராகுல் அந்த அணியில் இருந்து வெளியேறி தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக மாறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே பஞ்சாப் அணிக்காக ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் கூட அந்த அணியால் பிளேஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் மிக மோசமான நிலையை சந்தித்தது. இதன் காரணமாகவே மன உளைச்சலில் இருந்த ராகுல் புதிய அணிக்கு கேப்டனாக மாறி அந்த அணியை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்பதன் காரணமாக பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறி தற்போது லக்னோ அணிக்கு கேப்டனாக மாறியுள்ளார்.

pbks

- Advertisement -

இந்நிலையில் அவர் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களில் அனைவரது கவனத்தை ஈர்க்கும் வீரர் ஒருவர் குறித்து அவர் தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை அவரது தலைமையில் இந்திய அணி 3 க்கு 0 என்ற கணக்கில் இழந்து நாடு திரும்பிய நிலையில் இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய ரபாடாவை அவர் பாராட்டி பேசியுள்ளார்.

அவர் போன்ற ஒரு வீரரை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் போட்டிபோடும். ஏனெனில் டெல்லி அணிக்காக அவர் ஒரு கீ பிளேயராக இருந்துள்ளார். டெல்லி அணியின் மிகப்பெரிய சக்சஸ்க்கு அவரும் ஒரு காரணம். மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசும் அவர் சிறப்பாக யோசித்து பந்துவீச கூடியவர். அவரைப் போன்ற ஒரு வீரரை அனைத்து அணிகளும் வாங்க முயற்சிக்கும். அந்தவகையில் இந்த ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் ரபாடாவின் விலை நிச்சயம் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

RABADA

அதே போன்று மார்க்கோ யான்சன் மும்பை அணிக்காக சில போட்டிகளில் விளையாடி இருந்தாலும் அவரது திறமையும் அபாரமான ஒன்று. எனவே நிச்சயம் அவரும் இந்த ஐபிஎல் தொடரில் பெரிய விலைக்கு ஏலம் போவார். மேலும் தென் ஆப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வேண்டர்டுஷன் நல்ல தொகைக்கு ஏலம் போக வாய்ப்பு உள்ளதாக ராகுல் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் வேகப்பந்து வீச்சு மட்டுமின்றி ஸ்பின் பவுலிங்கிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் நிச்சயம் ஒரு பேட்ஸ்மேனாக அவர் ஏதாவது ஒரு ஐபிஎல் அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று கூறியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ககிசோ ரபாடா இதுவரை 50 போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட் நல்லபடியாக தகனம் செய்யப்பட்டது. என்னங்க இது – ஹர்ஷா போக்ளே குமுறல்

2017ஆம் ஆண்டு ஐபிஎல் கரியரை துவங்கிய ரபாடா 2018 ஆம் ஆண்டு முதுகுவலி காரணமாக அந்த சீசனை தவறவிட்டார். பின்னர் மீண்டும் டெல்லி அணியால் தக்க வைக்கப்பட்ட அவர் 2019ஆம் ஆண்டு சீசனில் 12 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதற்கடுத்து 2020 ஆம் ஆண்டு சீசனில் 17 போட்டிகளில் 30 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். அதோடு அந்த ஆண்டு அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய அவர் பர்ப்புள் தொப்பியையும் வென்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டில் சீசனில் 15 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement