டீமுக்கு அதுதான் வேணும்னா. அதை செய்யவும் நான் தயார். நோ ப்ராப்லம் – கே.எல் ராகுல் வெளிப்படை

Rahul
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முதலாவதாக நடைபெறவிருக்கும் இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது நாளை பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

KL-Rahul

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் தனது திருமணத்தை முடித்துக் கொண்ட இந்திய அணியின் துணைக்கேப்டன் கே.எல் ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது. வழக்கமாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கும் அவர் கடந்த சில தொடர்களாகவே சரியான பார்மின்றி தவிர்த்து வருகிறார். இதன் காரணமாக அவருக்கு துவக்க வீரருக்கான வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் அதே வேளையில் சுப்மன் கில் மிகச் சிறப்பாக விளையாடி வருவதால் அவரையே டேஸ்ட் கிரிக்கெட்டிலும் துவக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்ற கருத்துக்களும் நிலவி வருகிறது. இதன் காரணமாக இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் யார் துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்பது இதுவரை உறுதி செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் அணி நிர்வாகம் ஆசைப்பட்டால் நான் மிடில் ஆர்டரிலும் விளையாட தயார் என கே.எல் ராகுல் தெரிவித்துள்ளார்.

rahul

இது குறித்து அவர் கூறுகையில் : என்னுடைய டெஸ்ட் கரியரை 2014-ஆம் ஆண்டு ஆரம்பித்தபோது நான் மிடில் ஆர்டரில் தான் விளையாடினேன். எனவே அணி நிர்வாகம் என்னை மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டால் நிச்சயம் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொள்வேன். ஏனெனில் நான் எனது நாட்டிற்காக விளையாடி எனது அணிக்காக பங்களிப்பினை வழங்குவதில் மகிழ்ச்சி.

- Advertisement -

எந்த இடத்தில் என்னை விளையாட சொன்னாலும் நான் அதனை ஏற்றுக்கொண்டு விளையாடுவேன். அணிக்கு என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக உள்ளேன். எனவே என்னுடைய வாய்ப்பு எங்கு கிடைத்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான் என்று ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் நாக்பூர் மைதானம் குறித்து பேசிய அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : IND vs AUS : முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தேர்வுசெய்து அறிவித்த வாசிம் ஜாபர் – செம டீம் தான்

இந்திய ஆடுகளங்களில் நாங்கள் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கவே விரும்புகிறோம். ஆனாலும் இந்த நாக்பூர் மைதானம் எவ்வாறு செயல்படப்போகிறது என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. போட்டிக்கு முந்தைய நாள் தான் மைதானத்தின் தன்மையை வைத்து வீரர்களை உறுதி செய்ய முடியும். இதுவரை நாங்கள் பிளேயிங் லெவனை உறுதி செய்யவில்லை என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement