IND vs AUS : முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தேர்வுசெய்து அறிவித்த வாசிம் ஜாபர் – செம டீம் தான்

Jaffer
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நாளை பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்க உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடர் கோப்பைகள் அனைத்தையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளதால் இம்முறை இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த இந்திய அணி காத்திருக்கிறது.

IND-vs-AUS

- Advertisement -

அதேவேளையில் கடந்த சில தொடர்களாகவே ஆஸ்திரேலிய அணி இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்து வருவதால் இந்திய மண்ணில் வைத்து அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியும் தயாராகி வருகிறது. இதன் காரணமாக இந்த டெஸ்ட் தொடரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியுள்ளதால் அணியில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்று தெரிகிறது. எனவே இந்த முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Washington-Sundar

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பெற வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் தனது தேர்வினை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளார். அதன்படி இந்திய அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடம் கொடுத்துள்ளார்.

- Advertisement -

மேலும் அவர் விக்கெட் கீப்பராக கே.எஸ் பரத்தை தேர்வு செய்துள்ளார். அதுமட்டும் இன்றி மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தில் சுப்மன் கில்லை அவர் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டிக்காக வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஸ்கெட்ச் நமக்கில்ல ஆஸ்திரேலியாவுக்கு, தம்மை போலவே பந்து வீசும் வீரரை வைத்து அஷ்வின் போடும் மாஸ்டர் ப்ளான் – விவரம் இதோ

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) சுப்மன் கில், 6) கே.எஸ்.பரத், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) குல்தீப் யாதவ், 10) முகமது ஷமி, 11) முகமது சிராஜ்.

Advertisement