- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும்.. பி.சி.சி.ஐ-யிடம் அனுமதி கேட்டு விலகிய கே.எல் ராகுல் – விவரம் இதோ

அண்மையில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியிருந்த இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்த நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் அந்த தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அடுத்து அதிகபட்சமாக 276 ரன்கள் குவித்து தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

ஓய்வு எடுத்துக்கொண்ட கே.எல் ராகுல் :

இதன் காரணமாக அவரே இனி இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றும் ரோஹித் சர்மா அவரது இடத்தை கே.எல் ராகுலுக்கு நிரந்தரமாக விட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற ஆதரவும் ரசிகர்கள் மத்தியில் பெருகி வருகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரினை இந்திய அணி இழந்துள்ளதால் சீனியர் வீரர்கள் அனைவரும் உள்ளூர் தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கட்டளையிட்டுள்ளார்.

இதன் காரணமாக தற்போது உள்நாட்டில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்று விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கே.எல் ராகுலும் கர்நாடக அணிக்காக பரோடா அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இவ்வேளையில் ஆஸ்திரேலிய சென்று விளையாடியதால் தனக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக கூறி பி.சி.சி.ஐ அனுமதியோடு விஜய் ஹசாரே தொடரிலிருந்து கே.எல் ராகுல் விலகி இருக்கிறார். மேலும் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்பதனால் அதற்கு இந்த ஓய்வு தேவைப்படும் என்றும் கூறி விலகி இருக்கிறார்.

இதையும் படிங்க : சச்சின், லாரா மாதிரி இப்போவும் விராட் கோலியால் இந்த வழியில் இந்தியாவுக்கு உதவ முடியும்.. ரவி சாஸ்திரி

அதேவேளையில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய மற்ற இரண்டு கர்நாடக வீரர்களான பிரசித் கிருஷ்ணா மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் பரோடா அணிக்கு எதிரான போட்டியில் காலிறுதி போட்டியில் கர்நாடக அணிக்காக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -