இன்னுமும் முடியல.. தோற்று 4 நாளுக்கு பின் வருத்தத்தை பகிர்ந்த கே.எல் ராகுல் – விவரம் இதோ

KL-Rahul
- Advertisement -

கடந்த நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது 2003-ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் 20 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த கிடைத்த அற்புதமான வாய்ப்பை தவறவிட்டு கோப்பையை நழுவ விட்டனர்.

தோனிக்கு பிறகு ரோகித் சர்மா இந்த கோப்பையை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் 10 போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு கெத்தாக சென்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களை மட்டுமின்றி வீரர்களையும் பெரிய வருத்தத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

பல வீரர்கள் தோல்வியை தாங்க முடியாமல் மைதானத்திலேயே கண்கலங்கியபடி அமர்ந்ததையும் நம்மால் பார்க்க முடிந்தது. அதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல் ராகுலும் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அரைமண்டியிட்டு அமர்ந்தார்.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை முடிந்து நான்கு நாட்களுக்கு பிறகு தற்போது கே.எல் ராகுல் தனது சமூக வலைதளப்பக்கத்தின் மூலம் ஒரு தகவலை பகிர்ந்து அதில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இறுதிப் போட்டியில் விளையாடிய மூன்று புகைப்படங்களை பகிர்ந்த அவர் அதில் :

- Advertisement -

“இன்றளவும் மனது வலிக்கிறது” என்று ஒரு பதிவினை வெளியிட்டு அவரது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார். உலகக் கோப்பை தொடரின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணிக்காக செயல்பட்ட ராகுல் இந்த தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இறுதிப்போட்டியில் கூட 107 பந்துகளை சந்தித்து 66 ரன்கள் குவித்திருந்தார்.

இதையும் படிங்க : ஃபைனலில் இந்தியாவை சாய்க்க ஆஸி போட்ட திட்டத்தை கேட்டு உறஞ்சு போயிட்டேன்.. அஸ்வின் பேட்டி

இந்த தொடரில் எவ்வளவோ போராடியும் மீண்டும் இந்திய அணி தோல்வியை சந்தித்ததில் அவர் மனமுடைந்து போயிருக்கிறார் என்றே கூறலாம். இந்த உலகக் கோப்பை தோல்விக்கு பின்னர் இந்திய அணி அடுத்ததாக சூரியகுமார் யாதவ் தலைமையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement