4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்பும் கே.எல் ராகுல் – வெளியேறப்போகும் வீரர் யார் தெரியுமா?

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் இதுவரை இந்த தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள இந்திய அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 23-ஆம் தேதி ராஞ்சி நகரில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளதால் இந்த நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த தொடரின் முதல் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் காயம் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியை தவற விட்டிருந்தார்.

இவ்வேளையில் அடுத்ததாக நடைபெற இருக்கும் நான்காவது போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்புகிறார் என்பதனால் அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் இருந்து ரஜத் பட்டிதார் விடுவிக்கப்படுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் விராட் கோலிக்கு பதிலாக மாற்றுவீராக இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த அவர் தனக்கு கிடைத்த இரண்டு போட்டியிலுமே சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளதால் அவரை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக கே.எல் ராகுலுக்கு அந்த இடம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் ஒன்னும் அதை பாத்து கத்துக்கல.. முடிஞ்சா நீங்க கத்துக்கோங்க.. டெக்கெட்டை விளாசிய நாசர் ஹுசைன்

மேலும் கே.எல் ராகுல் அணிக்கு திரும்புவதன் மூலம் இந்திய அணியின் பேட்டி வலிமையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு கடந்த போட்டியில் அறிமுகமாகி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் நான்காவது போட்டியிலும் நிச்சயம் இடம்பெற்று விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

Advertisement