தல தோனிக்கு ஸ்பெஷல் கௌரவ மரியாதை கொடுத்த கேஎல் ராகுல்.. அவரையே மிஞ்சி அபார சாதனை

KL rahul MS Dhoni
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 33வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. ஏப்ரல் 19ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை ரவீந்திர ஜடேஜா 57*, ரஹானே 36, மொய்ன் அலி 30, தோனி 28* ரன்கள் எடுத்த உதவியுடன் 177 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதை சேசிங் செய்த லக்னோவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் 82, குயிண்டன் டீ கான் 54 ரன்கள் அடித்து 19வது ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 7 போட்டிகளில் 3வது தோல்வியை பதிவு செய்து சிஎஸ்கே அணி பின்னடைவை சந்தித்தது. லக்னோவின் இந்த வெற்றிக்கு 82 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய கே.எல் ராகுல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

கேஎல் ராகுல் மரியாதை:
மேலும் இப்போட்டியில் அடித்த அரை சதத்தையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக கே.எல் ராகுல் இதுவரை 25 முறை 50க்கும் ஏற்பட்ட ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை உடைத்து அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. கேஎல் ராகுல் : 25*
2. எம்எஸ் தோனி : 24
3. குவிண்டன் டீ காக் : 23

மறுபுறம் இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரர் எம்எஸ் தோனி கடைசி நேரத்தில் களமிறங்கி 28* ரன்களை வெளுத்து வாங்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். குறிப்பாக விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் தலைக்கு மேல் அட்டகாசமான சிக்சர் அடித்த அவர் கடைசி ஓவரில் 101 மீட்டர் பிரம்மாண்ட சிக்ஸரை பறக்க விட்ட வயதானாலும் தம்முடைய ஃபினிஷிங் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்தார்.

- Advertisement -

அந்த வகையில் சிறப்பாக விளையாடிய தோனிக்கு போட்டியின் முடிவில் கே.எல். ராகுல், நிக்கோலஸ் பூரான், மார்கஸ் ஸ்டோய்னிஸ் போன்ற லக்னோ வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கை கொடுத்துக் கொள்ளும் நிலையில் லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் தம்முடைய தலையில் தொப்பியை அணிந்தவாறு சிஎஸ்கே வீரர்களுக்கு கை கொடுத்தார்.

இதையும் படிங்க: ருதுராஜ் எடுத்துள்ள தவறான முடிவால் தான் சென்னை அணி தோல்வியை சந்திக்கிறதா? – வெளியான தகவல்

ஆனால் தோனியை பார்த்ததும் தம்முடைய தலையில் இருந்த தொப்பியை கழற்றிய கேஎல் ராகுல் தம்முடைய முன்னாள் இந்திய கேப்டனுக்கு மரியாதையுடன் கை கொடுத்து ஸ்பெஷல் கௌரவத்தை வழங்கினார். அதைத் தொடர்ந்து சென்னை தங்களுடைய அடுத்த போட்டியில் லக்னோ அணியை சேப்பாக்கத்தில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement