107/5 என மூழ்கிய இந்தியாவை தனி ஒருவனாக தூக்கிய ராகுல்.. பண்ட், தோனியை மிஞ்சி மாபெரும் சாதனை

KL rahul 101
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 17, சுப்மன் கில் 2 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 24/3 என்ற சுமாரான துவக்கத்தை பெற்று தடுமாறிய இந்தியாவை 4வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் காப்பாற்ற போராடிய ஸ்ரேயாஸ் ஐயரை 31 ரன்களில் அவுட்டாக்கிய ரபாடா மறுபுறம் சவாலை கொடுத்த நம்பிக்கை நாயகன் விராட் கோலியையும் 38 ரன்களில் காலி செய்தார். அதன் காரணமாக 107/5 என மேலும் சரிந்த இந்தியாவுக்கு கேஎல் ராகுல் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் ரவிச்சந்திரன் அஸ்வின் 8, சர்துள் தாக்கூர் 24 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

காப்பாற்றிய ராகுல்:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சவாலை கொடுத்த ராகுல் அரை சதம் கடந்து 70* ரன்கள் எடுத்ததால் முதல் நாள் முடிவில் இந்தியா 208/8 ரன்கள் எடுத்திருந்தது. அந்த நிலைமையில் இன்று துவங்கிய 2வது நாளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 14 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 101 (137) ரன்கள் குவித்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றி ஆட்டமிழந்தார்.

குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் தம்முடைய 7வது டெஸ்ட் சதத்தை அடித்த அவர் இப்போட்டியில் பேட்டிங்க்கு சவாலாக இருந்த பிட்ச்சில் வேறு எந்த பேட்ஸ்மேனும் 50 ரன்கள் கூட தாண்டாத போது தனி ஒருவனாக சதமடித்து இந்தியாவை காப்பாற்றினார். அதனால் ரசிகர்களும் பெவிலியனில் இருந்த ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணியினரும் அவருக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.

- Advertisement -

அதை விட இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையை கேஎல் ராகுல் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. கேஎல் ராகுல் : 101, சென்சூரியன், 2023*
2. ரிஷப் பண்ட் : 100*, நியூலேண்ட்ஸ், 2022
3. எம்எஸ் தோனி : 90, சென்சூரியன், 2010

இதையும் படிங்க: அவர் மட்டும் இல்லனா இந்திய அணி ஆட்டம் கண்டுரும்.. நட்சத்திர வீரரை பாராட்டிய மகாயா நிடினி

அந்த வகையில் 200 ரன்கள் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவை கேஎல் ராகுல் தென்னாப்பிரிக்காவுக்கு சவாலை கொடுத்து முதல் இன்னிங்சில் 245 என்ற நல்ல ஸ்கோர் குவிப்பதற்கு உதவியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளும் நன்ரே பர்கர் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

Advertisement