உங்களோட பாராட்ட நான் வாங்கிக்க விரும்பல – நன்றி சொன்ன குல்தீப்புக்கு கேஎல் ராகுல் நெகிழ்ச்சி பதில், நடந்தது என்ன?

KL Rahul Kuldeep Yadav
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது. கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் சர்மா 53, கேஎல் ராகுல் 39, இஷான் கிசான் 33 ரன்கள் எடுத்த உதவியுடன் 214 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக வெல்லாலகே 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை துரத்திய இலங்கை ஆரம்பம் முதலே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 41.3 ஓவரில் 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக துணித் வெல்லாலகே 42* டீ சில்வா 41 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றிக்கு 58 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றி கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

பாராட்டு வேண்டாம்:
முன்னதாக இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட கேஎல் ராகுல் இந்திய பவுலர்களுக்கும் முக்கியமான குறிப்புகளை வழங்கி விக்கெட்டுகளை எடுப்பதற்கும் டிஆர்எஸ் முடிவை எடுக்கலாமா என்பதில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் ஆதரவாக இருந்தார். அந்த வரிசையில் 25/3 என்ற சுமாரான துவக்கத்தை பெற்று தடுமாறிய இலங்கையை நங்கூரமாக நின்று காப்பாற்ற முயற்சித்த சமரவிக்கிரமா 17 (31) ரன்கள் எடுத்து நன்கு செட்டிலாகியிருந்தார்.

அப்போது 18வது ஓவரை வீச வந்த குல்தீப் யாதவிடம் சென்று அவர் சில ஆலோசனைகளை கொடுத்தார். அதைப் பின்பற்றி பந்து வீசிய குல்தீப் யாதவின் 3வது பந்தை இறங்கி சென்று அடிக்க முயற்சித்த சமரவிக்கிரமா தவறவிட்டதால் கேஎல் ராகுல் லாபகமாக பிடித்து ஸ்டம்பிங் முறையில் அவுட்டாக்கினார். மொத்தத்தில் அந்த தருணத்தில் கிட்டத்தட்ட எம்எஸ் தோனியை போலவே கேஎல் ராகுல் உதவிகரமாக செயல்பட்டு குல்தீப்புக்கு உதவியதால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டினர்.

- Advertisement -

அந்த நிலையில் போட்டியின் முடிவில் சமரவிக்ரமா விக்கெட்டை எடுப்பதற்கு ராகுல் தான் உதவியதாக குல்தீப் யாதவ் பாராட்டி பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுல் பாய் எனக்கு ஆலோசனைகளை கொடுத்தார். பந்து சுழன்றதால் 4 அல்லது 5வது ஸ்டம்ப் லைனில் வீசினால் அதிக டிரிப்ட் கிடைக்கும் என்று அவரிடம் தெரிவித்தார். எனவே சமரவிக்ரமா விக்கெட்டை எடுத்ததற்கு கே.எல் ராகுலுக்கு நான் பாராட்டு தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: டேவிட் வார்னரின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது. வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த பரிதாபம் – அதோட மேட்ச்சும் க்ளோஸ்

அந்த நிலையில் போட்டியின் முடிவில் குல்தீப்புக்கு என்ன ஆலோசனை கொடுத்தீர்கள் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கேட்டார். அதற்கு குல்தீப் யாதவ் பாராட்டுகளை தாம் வாங்க விரும்பவில்லை என்று தெரிவித்து ராகுல் பேசியது பின்வருமாறு. “அந்த விக்கெட்டை அவர் எடுத்ததற்காக நான் எந்த பாராட்டையும் பெறப்போவதில்லை. நீங்கள் விக்கெட் கீப்பராக இருக்கும் போது பேட்ஸ்மேன் எப்படி செயல்படுவார் என்று ஐடியா கிடைக்கும். எனவே அதை மட்டுமே நான் அவருக்கு சொன்னேன். அதை சரியாக பின்பற்றுவதற்கு அவரிடம் திறமை வேண்டும். அதை சரியாக செய்த குல்தீப்புக்கு அதிர்ஷ்டமும் கை கொடுத்தது” என்று கூறினார்.

Advertisement