டேவிட் வார்னரின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது. வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த பரிதாபம் – அதோட மேட்ச்சும் க்ளோஸ்

David-Warner
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது ஆறு விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் முன்னணி வீரரான எய்டன் மார்க்கம் 102 ரன்களையும், துவக்க வீரர் டி காக் 82 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 339 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது துவக்கத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்து வந்தாலும் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரியவே இறுதியில் 34.3 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

- Advertisement -

இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் ஆட்டமிழந்த விதம் அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் அவர் 56 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 78 ரன்கள் அடித்து அசத்தியிருந்த வேளையில் ரன்குவிப்பை வெகு வேகமாக முன்னேற்றி வந்த அவர் ரன் ஓடும்போது தனது காலில் இருந்த ஷூ நழுவியதால் தடுமாறி கீழே விழுந்து மீண்டும் எதிர் முனையில் உள்ள கிரீசை தொட முடியாமல் ரன் அவுட்டாகி பரிதாபமான முறையில் வெளியேறினார்.

இதையும் படிங்க : ரொம்ப ஆட்டம் காட்டிட்டாரு.. அடுத்த டைம் வெல்லலாகே சிக்குனா அதை செஞ்சு விட்ருவோம் – பாராட்டுடன் எச்சரித்த கேஎல் ராகுல்

அவர் ஆட்டமிழந்த வீடியோ கூட தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு டேவிட் வார்னர் ஆட்டமிழந்ததும் நல்ல நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணி இறுதியில் தோல்வியையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement