இதெல்லாம் 10 – 15 வருஷம் கழிச்சு யாரும் நினைக்க மாட்டாங்க.. 2024இல் அந்த சம்பவம் உறுதி.. ராகுல் பேட்டி

KL rahul Press 3
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியாவுக்கு 2023 காலண்டர் வருடம் சுமாரானதாகவே அமைந்தது என்று சொல்லலாம். ஏனெனில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் லீக் தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சொதப்பி கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

அதை விட சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியா எதிர்ணிகளை தெறிக்க விட்டதால் கண்டிப்பாக 2011 போல கோப்பையை வெல்லும் என்று அனைவரும் நம்பினர். ஆனால் மீண்டும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சொதப்பி கோப்பையை தாரை வார்த்த இந்தியா தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

அனல் பறக்கும்:
இவற்றைத் தவிர்த்து 2023 ஆசிய கோப்பையை பாகிஸ்தான் போன்ற அணிகளை தோற்கடித்து வென்றது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மற்றபடி சாதாரண இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை தெறிக்க விட்ட இந்தியா தற்சமயத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான ஐசிசி தரவரிசையிலும் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது.

அதன் வாயிலாக ஒரே நேரத்தில் 3 வகையான ஐசிசி தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்த அணி என்ற தென்னாபிரிக்காவின் (2016இல்) உலக சாதனையை ஏற்கனவே இந்தியா சமன் செய்தது. இந்நிலையில் இது போன்ற இருதரப்பு தொடர்களில் பதிவு செய்யப்படும் வெற்றிகளை 10 – 15 வருடங்கள் கழித்து யாருமே நினைவில் வைத்திருக்க மாட்டார்கள் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். எனவே அடுத்ததாக நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் கூடுதல் நெருப்புடன் போராடி வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இருதரப்பு தொடர்களில் வெற்றி பெறுவது முக்கியமல்ல. அல்லது 10 – 15 வருடங்கள் கழித்து நாங்கள் ஓய்வு பெற்ற பின் யாருமே அதை ஒரு சாதனையாக நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். அல்லது நாங்கள் எங்களுடைய கேரியரில் எவ்வளவு ரன்கள், விக்கெட்கள் எடுத்தோம். அல்லது எத்தனை இருதரப்பு தொடர்களை வென்றோம் என்பதை யாரும் நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மாறாக உலகக் கோப்பை மட்டுமே அனைவரது நினைப்பில் இருக்கும்”

இதையும் படிங்க: முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய 2 வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் தனி கவனத்தை செலுத்தும் – ராகுல் டிராவிட்

“எனவே ஆம் அடுத்த முறை அதை நோக்கி நாங்கள் 2 படிகள் மேலே செல்லும் போது எங்களுக்குள் கூடுதலாக நெருப்பு இருக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லுமா என்ற வழக்கமான எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement