காணாமல் போன தடவல் பேட்டிங்.. மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படுவதற்கான ரகசியம் பற்றி – கேஎல் ராகுல் உற்சாக பேட்டி

KL Rahul Press
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தர வரிசையில் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறி சாதனை படைத்தது. மேலும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஓய்வெடுக்கும் ரோஹித்துக்கு பதில் கேப்டனாக செயல்படும் கேஎல் ராகுல் காயத்திலிருந்து குணமடைந்து அசத்தி வருவது இந்திய அணிக்கு பலமாக மாறியுள்ளது.

கடந்த 2014இல் அறிமுகமாகி மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறிய அவர் ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக அத்ததினார். அதன் காரணமாக 2019க்குப்பின் ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர துவக்க வீரராக உருவெடுத்த அவர் ஆரம்பத்தில் சிறப்பாகவே செயல்பட்டார். இருப்பினும் நாளடைவில் அதே இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவர் 2022 ஆசிய டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

மிடில் ஆர்டர் ரகசியம்:
அதனால் சுயநலமாக விளையாடுகிறார் என்று ஆதாரங்களுடன் விமர்சித்த ரசிகர்களிடம் அவர் நிறைய வெறுப்பையும் சம்பாதித்தார். அதனால் உச்சகட்ட விமர்சனங்கள் எழுந்ததால் ரிஷப் பண்ட்க்கு பதிலாக விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற்றது முதலே ஓப்பனிங்கை விட மிடில் ஆர்டரில் அவர் சிறப்பாக செயல்படுகிறார் என்று சொன்னால் மிகையாகாது.

குறிப்பாக 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்த அவர் ஓப்பனிங்கில் 23 போட்டிகளில் 915 ரன்களை 43.57 என்ற சராசரியில் எடுத்துள்ளதை விட மிடில் ஆர்டரில் 29 இன்னிங்ஸில் 1210 ரன்களை 55.00 என்ற சிறப்பான சராசரியில் எடுத்துள்ளார். இந்நிலையில் மிடில் ஆர்டரின் சிறப்பாக செயல்படுவதற்கான பின்னணி பற்றி முதல் போட்டியின் முடிவில் அவர் மனம் திறந்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“டாப் ஆடரில் விளையாடும் போது உங்களுடைய விளையாட்டை நீங்களே உருவாக்க வேண்டிய நிலைமை ஏற்படும். குறிப்பாக சேசிங் செய்யும் போது கூட நீங்கள் குறிப்பிட்ட ஸ்கோரை அடித்தாக வேண்டும். மேலும் அங்கே விக்கெட்டுகள் விழுந்த அழுத்தமும் தேவையான ரன் ரேட்டும் சரியாக தெரியாது. ஆனால் மிடில் ஆர்டரில் நீங்கள் விளையாடும் போது வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் என்பதால் அதற்கேற்றார் போல் நீங்கள் விளையாடும் வசதியை பெறுவீர்கள்”

இதையும் படிங்க: ப்எப்போ தான் அதுல முன்னேறுவீங்க.. இப்படியே போனா கண்டிப்பா 2023 உ.கோ தவற விட்ருவோம் – வென்றும் இந்திய அணி பற்றி கைப் கவலை

“இது மட்டுமே அவ்விரு இடத்திற்கான பெரிய வித்தியாசமாகும். மேலும் மிடில் ஆர்டரில் விளையாடி அதற்கேற்றார் போல் என்னை உட்படுத்திக் கொள்ள நிறைய வாய்ப்புகள் கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அத்துடன் 4, 5 இடங்களில் விளையாடுவதற்கு பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனால் டாப் மற்றும் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement