- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பவுலர்களை குறை சொல்ல முடியாது.. 358 அடிச்சும் இந்தியா தோற்க இதான் காரணம்.. கேப்டன் ராகுல் பேட்டி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. டிசம்பர் மூன்றாம் தேதி ராய்ப்பூரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 359 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 105, விராட் கோலி 102, கேப்டன் ராகுல் 66 ரன்கள் குவித்து சதத்தை அடித்து அசத்தினார்கள்.

அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 49.2 ஓவரில் 362/6 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஐடன் மார்கரம் சதமடித்து 110 ரன்கள் குவித்து நல்ல துவக்கம் கொடுத்தார். அதை வீணடிக்காமல் கேப்டன் தெம்பா பவுமா 46, மேத்யூ 68, தேவால்ட் ப்ரேவிஸ் 54 ரன்கள் அடித்து தென் ஆப்பிரிக்காவை வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

குறை சொல்ல முடியாது:

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை சமன் செய்த தென்னாபிரிக்கா தொடரையும் சமன் செய்தது. மறுபுறம் சுமாராக பந்து வீசிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இப்போட்டியில் இரவு நேரத்தில் பனியின் தாக்கத்தால் இந்திய பவுலர்களால் நன்றாக பந்து வீச முடியவில்லை என்று கேப்டன் ராகுல் தெரிவித்துள்ளார்.

அதனால் டாஸ் வெல்ல முடியாமல் போனது இந்தியாவின் தோல்விக்கு காரணமானதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “மைதானத்தில் இருந்த பனியின் தாக்கத்தால் 2வது இன்னிங்ஸில் பந்து வீசுவது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை வைத்து இது மறப்பதற்கு கடினமான தோல்வியல்ல. கடந்தப் போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடினாலும் இன்று நடுவர்கள் கேட்கும் போது பந்தை மாற்றிக் கொடுத்து எங்களிடம் நன்றாக நடந்து கொண்டனர்”

- Advertisement -

ராகுல் கருத்து:

“இப்போட்டியில் டாஸ் மிகப்பெரிய வேலையை செய்துள்ளது. எனவே அதை நான் வெல்லாததற்காக என்னை நானே குத்திக்கொள்கிறேன். இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கான இடங்கள் இருக்கிறது. 350 ரன்கள் போதுமானது என்று நாங்கள் நினைத்தோம். அதே சமயம் ஈரமான பந்தை எங்களது பவுலர்கள் கையாள்வதற்காக எக்ஸ்ட்ரா 20 – 25 ரன்கள் அடிக்க வேண்டும் என்று நாங்கள் பேசினோம்”

இதையும் படிங்க: தெ.ஆ அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – 15 பேர் கொண்ட லிஸ்ட் இதோ

“ருதுராஜ் அரை சதம் கடந்ததும் வேகத்தை எடுத்து அழகாக விளையாடினார். விராட் 53 முறை இப்படி செய்துள்ளதை நாம் பார்த்துள்ளோம். பார்ட்னர்ஷிப் அமைத்து தொடர்ந்து வேகத்துடன் விளையாடுவதற்காகவே நான் 5வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று கௌதம் பாயும் நானும் பேசினோம். கடந்தப் போட்டியில் அரை சதமடித்த நான் அதை செய்வதற்கான தன்னம்பிக்கையைக் கொண்டிருந்தேன். அம்முடிவை நாங்கள் 30 – 35வது ஓவரில் எடுத்தோம்” என்று கூறினார்.

- Advertisement -