தெ.ஆ அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – 15 பேர் கொண்ட லிஸ்ட் இதோ

IND vs RSA
- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியானது அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியிருந்த வேளையில் தற்போது ஒருநாள் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு :

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் டிசம்பர் 6-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள வேளையில் அதற்கு அடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற உள்ளது. டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.

- Advertisement -

இவ்வேளையில் எதிர்வரும் இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி இன்று பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் வெளியான 15 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று துணை கேப்டனாக சுப்மன் கில் அணிக்கு மீண்டும் திரும்புகிறார் இருந்தாலும் அவருடைய உடற்தகுதி குறித்து பிசிசிஐ அனுமதி வழங்கினால் மட்டுமே இந்த தொடரில் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

அதுதவிர்த்து வழக்கம்போல அபிஷேக் சர்மா, திலக் வர்மா போன்ற பேட்ஸ்மேன்களும், ஹார்டிக் பாண்டியா, ஷிவம் துபே போன்ற வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களும், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களும் இடம் பிடித்துள்ளனர். மேலும் சுழற்பந்து வீஹ்சு ஆல்ரவுண்டர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

- Advertisement -

முழுநேர சுழற்பந்து வீச்சாளராக வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை ஹர்ஷித் ராணா, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய வீரர்களின் முழு பட்டியல் இதோ :

இதையும் படிங்க : பேக் டூ பேக் செஞ்சுரி.. சச்சினின் மேலும் ஒரு சாதனையை சமன் செய்த விராட் கோலி – விவரம் இதோ

1) சூரியகுமார் யாதவ், 2) சுப்மன் கில், 3) அபிஷேக் சர்மா, 4) திலக் வர்மா, 5) ஹார்டிக் பாண்டியா, 6) ஷிவம் துபே, 7) அக்சர் பட்டேல், 8) வாஷிங்டன் சுந்தர், 9) ஜிதேஷ் சர்மா, 10) சஞ்சு சாம்சன், 11) ஜஸ்ப்ரீத் பும்ரா, 12) வருண் சக்கரவர்த்தி, 13) அர்ஷ்தீப் சிங், 14) குல்தீப் யாதவ், 15) ஹர்ஷித் ராணா.

Advertisement