தன்மீது வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ரைக் ரேட் குற்றச்சாட்டு குறித்த விமர்சனமங்களுக்கு – ராகுல் கொடுத்த பதிலடி

Rahul
- Advertisement -

விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக தயாராகி வரும் இந்தியா அடுத்ததாக தனது சொந்த மண்ணில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. சமீபத்திய ஆசிய கோப்பையில் சந்தித்த தோல்விக்கான காரணங்களை சரி செய்ய நல்ல வாய்ப்பாக பார்க்கப்படும் இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் மற்றும் துணை கேப்டன் கேஎல் ராகுல் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறார். கடந்த 2019க்குப்பின் மிகச் சிறப்பாக செயல்பட்டு ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக இடம் பிடித்த இவருடைய ஐபிஎல் மார்க்கெட் 17 கோடி என்ற உச்சத்தை எட்டியது.

kl rahul

- Advertisement -

அதனால் அந்த மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சமீப காலங்களில் அணியின் வெற்றியைப் பற்றி கவலைப்படாமல் பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் மெதுவாக பேட்டிங் செய்யும் அவர் கடைசி வரை அதிரடியை துவக்காமல் கடைசியில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் அவுட்டாவது தோல்வியை பரிசளிக்கிறது. அதிலும் இந்தியாவின் வருங்கால கேப்டனாக தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் வளர்க்க நினைக்கும் இவர் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து ஜிம்பாப்வேக்கு எதிராக கேப்டனாக களமிறங்கி 1, 30 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஸ்ட்ரைக் ரேட் முக்கியமல்ல:
அந்த நிலைமையில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கோல்டன் டக் அவுட்டான அவர் கத்துக்குட்டி ஹாங்காங்க்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தது ரசிகர்களை கோபமடைய வைத்தது. அதனால் உலக கோப்பையை வெல்ல வேண்டுமெனில் இவரை நீக்கிவிட்டு ஃபார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுந்துள்ளன. இருப்பினும் கிளாஸ் நிறைந்த பேட்ஸ்மேனான அவருக்கு கேப்டன் உட்பட அனைவரும் தொடர்ந்து ஆதரவை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட்டில் குறை இல்லாதவர்கள் யாரும் கிடையாது என்று தெரிவிக்கும் கேஎல் ராகுல் டி20 கிரிக்கெட்டில் ஸ்ட்ரைக் ரேட்டை விட வெற்றி பெறுவதே முக்கியம் என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

KL Rahul

இது பற்றி முதல் டி20 போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “அதில் அனைத்து வீரர்களும் முன்னேற விரும்புவார்கள். இருப்பினும் இங்கு யாரும் முழுமையானவர் கிடையாது. ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றில் முன்னேற்றம் காண்பதற்காக உழைத்து வருகிறார்கள். அந்த வகையில் ஸ்டிரைக் ரேட் என்பது முக்கியமானது. ஆனால் எந்த பேட்ஸ்மேன்களும் ஸ்டிரைக் ரேட்டை நினைத்துக் கொண்டு விளையாடுவதை நீங்கள் பார்க்க முடியாது. எனவே இது ஒரு வீரர் 200 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறாரா அல்லது 120 – 130 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியும் அணி வெல்கிறதா என்பது முக்கியம். இதைப் பற்றி யாரும் அலசுவதில்லை”

- Advertisement -

“இருப்பினும் இதில் முன்னேறுவதற்காக நான் முயற்சித்து வருகிறேன். எங்களது அணியில் கடந்த 10 – 12 மாதங்களில் ஒவ்வொரு வீரருக்கும் என்ன வேலை செய்ய வேண்டும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு வீரரும் சிலவற்றில் முன்னேற வேண்டியுள்ள நிலையில் நான் ஒவ்வொரு முறை பேட்டிங் செய்ய களமிறங்கும் போது எப்படி சிறந்த தொடக்க வீரராக செயல்படுவது என்பதில் முன்னேறி வருகிறேன். இங்கு விமர்சனங்கள் நிறைய இருந்தாலும் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் இதர வீரர்கள் அந்த வீரரை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம்”

KL-Rahul

“ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரரும் சிறப்பாக செயல்பட முயற்சிக்கின்றனர். ஆனால் அனைத்து போட்டியிலும் அனைவராலும் வெற்றிகரமாக இருக்க முடிவதில்லை. அதனால் தோல்வியடைந்தால் எங்களுடைய வீரர்கள் பயப்படாத அளவுக்கு நாங்கள் எங்களது அணியில் சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம். நீங்கள் அனைவரும் விமர்சிப்பதை போலவே நாட்டுக்காக விளையாடும் எங்களை நாங்களே விமர்சித்துக் கொள்வோம்.

- Advertisement -

எங்களைப் பொறுத்தவரை நாட்டுக்காக வென்று உலக கோப்பையை வெல்ல வேண்டும். எங்களது மனதிலும் இருக்கும் அந்த எண்ணத்தில் வெற்றி காண முடியவில்லையெனில் நாங்களும் வருத்தமடைவோம்”

இதையும் படிங்க : மீண்டும் அவர் பார்மிற்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு மிகவும் பலத்தை தரும் – மிட்சல் ஜான்சன் ஓபன்டாக்

“அந்த சமயங்களில் எங்களது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் எங்களுக்கு எப்போதும் உத்வேகத்தை கொடுப்பார்கள். அவர்களைப் போல அனைவரும் சற்று ஆதரவும் அரவணைப்பும் கொடுப்பதையே வீரர்கள் எதிர்பார்க்கின்றனர்” என்று கூறினார். இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பை பைனலில் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் ராகுல் கூறும் 120 – 130 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி பாகிஸ்தான் தோற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement