மீண்டும் அவர் பார்மிற்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு மிகவும் பலத்தை தரும் – மிட்சல் ஜான்சன் ஓபன்டாக்

Mitchell Johnson
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று செப்டம்பர் 20-ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 23-ஆம் தேதி இரண்டாவது டி20 போட்டி நாக்பூர் மைதானத்திலும், செப்டம்பர் 25-ஆம் தேதி மூன்றாவது டி20 போட்டி ஹைதராபாத் மைதானத்திலும் நடைபெற உள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளதால் இரு அணிகளுமே தொடரை வெல்ல முனைப்பு காட்டும் என்பதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மிட்சல் ஜான்சன் இந்த தொடரில் இந்திய அணியின் வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் அவரது ரன்குவிப்பு இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் பெஸ்ட் பிளேயர்களிடம் இருந்து ரன்கள் வர ஆரம்பித்திருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலத்தை தரும். விராட் கோலி தான் இந்திய அணியின் போகஸ்ஸையே மாற்றிய ஒரு கேப்டன். தற்போது அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் ரன்களை குவிக்க ஆரம்பித்திருப்பது நிச்சயம் இந்திய அணிக்கு பலத்தை சேர்க்கும்.

Virat Kohli IND vs PAK

இந்த தொடரினை அவர்கள் வெற்றியுடன் முடிக்க நினைப்பார்கள். ஏனெனில் எதிர்வரும் உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்த தொடரில் வெற்றி பெற்றால் நல்ல நம்பிக்கை கிடைக்கும் என்பதன் காரணமாக இந்திய அணி இந்த தொடரில் வெற்றி பெற முயற்சிக்கும். அதே வேளையில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணிக்கு கடும் சவாலை அளிக்கும் என்பதனால் இந்த தொடர் இரு அணிகளுக்குமே மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது என்று பார்ப்பதைவிட அடுத்ததாக டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக அவர்கள் இந்த தொடரில் எவ்வாறு செயல்படப்போகிறார்கள் என்பதையே தற்போது நாம் கவனிக்க வேண்டும். நிச்சயம் இந்திய அணி தங்களது பலத்தை இந்த தொடரில் நிரூபிக்க காத்திருப்பார்கள் என்று கூறினார்.

இதையும் படிங்க : ஒரு தலைமுறைக்கு ஒருமுறை தான் இப்படி பட்டவங்க கிடைப்பாங்க. ஜூலன் கோஸ்வாமியை பாராட்டிய – ரோஹித் சர்மா

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி 1020 நாட்கள் கழித்து சர்வதேச கிரிக்கெட்டில் அண்மையில் தான் தனது 71-வது சதத்தை பதிவு செய்திருந்தார். அதுமட்டும் இன்றி ஆசிய கோப்பை தொடரில் 276 ரன்களை குவித்த அவர் அந்த தொடரில் அதிக ரன்களை குவித்த பேஸ்ட்மேன்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். அதோடு அவரது ஸ்ட்ரைக் ரேட் அந்த தொடரில் 147-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement