WTC Final : ஹூ ஹூம்.. நோ சேன்ஸ்.. கே.எல் ராகுல் குறித்து வெளியான அதிகாரபூர்வ தகவல் – என்ன தெரியுமா?

KL-Rahul
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ராகுல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பந்தை தடுக்க ஓடிய போது தொடை பகுதியில் காயமடைந்து மைதானத்திலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் பேட்டிங் செய்ய வந்த அவர் கடைசி வீரராக களமிறங்கியும் பேட்டிங் செய்ய முடியாமல் வருத்தத்துடன் வெளியேறினார்.

KL Rahul

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது கே.எல் ராகுல் ஏற்பட்ட காயத்திற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஸ்கேன் ரிசல்ட்டுகள் வெளியாகி உள்ளன. இந்த ஸ்கேன் ரிசல்ட்டுக்கு பிறகே கே.எல் ராகுல் குறித்த முழுமையான தகவல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் மும்பை சென்று தனது காயத்திற்கான ஸ்கேன் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ள அவருடைய மருத்துவ அறிக்கைகள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : கே.எல் ராகுலின் தொடை பகுதியில் உள்ள தசை நார் கிழிந்துள்ளது.

KL-Rahul

இதன் காரணமாக அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே அவர் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறுகிறார் என்று லக்னோ அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

அதோடு கூடுதலாக மேலும் ஒரு பின்னடைவாக அடுத்த மாதம் லண்டனில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இருந்தும் கே.எல் ராகுல் விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர். இப்படி கே.எல் ராகுலின் மருத்துவ அறிக்கை வெளியாகியது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : வீடியோ : ஸ்டிக்கை தூக்கி போட்டு அசத்தல் நடை, கலக்கல் டேபிள் டென்னிஸ் – வேகமாக குணமடையும் ரிஷப் பண்ட்

ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான பும்ரா, பண்ட், ஷ்ரேயாஸ் ஆகியோர் காயத்தால் விளையாடமுடியாத நிலையில் தற்போது இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடியுள்ள கே.எல் ராகுலும் இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement