வீடியோ : ஸ்டிக்கை தூக்கி போட்டு அசத்தல் நடை, கலக்கல் டேபிள் டென்னிஸ் – வேகமாக குணமடையும் ரிஷப் பண்ட்

Rishabh Pant
- Advertisement -

டெல்லியை சேர்ந்த நட்சத்திர இளம் கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் கடந்த டிசம்பர் மாத இறுதியில் துரதிஷ்டவசமாக கார் விபத்திற்கு உள்ளாகி பெரிய காயத்தை சந்தித்தார். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் தீவிர சிகிச்சைகளை பெற்று தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார். ஆனாலும் அவர் இல்லாதது இந்தியாவுக்கு குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய பின்னடைவாக இருந்து வருகிறது. ஏனெனில் என்ன தான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது முதலே அதிரடியாக விளையாடி எதிரணிகளை பந்தாடும் அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்தார்.

மேலும் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான பின் ரகானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியாவை சிட்னியில் அதிரடியாக விளையாடி வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்த அவர் புகழ் பெற்ற காபா மைதானத்தில் 89* ரன்கள் விளாசி மறக்க முடியாத சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றி 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் தடுமாறி வந்த அவர் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 125* ரன்களை விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

ரசிகர்கள் மகிழ்ச்சி:
அப்படிப்பட்ட அவர் இல்லாதது சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக இருந்தது. குறிப்பாக கேஎல் ராகுல் மற்றும் கேஎஸ் பரத் ஆகியோர் திணறிய நிலையில் நேதன் லயன், மேத்தியூ குனேமான் போன்ற ஸ்பின்னர்களை ரிசப் பண்ணிட்டு இருந்திருந்தால் நிச்சயம் ஒன்றில் இல்லையென்றால் கூட மற்றொன்று போட்டியில் அடித்து நொறுக்கியிருப்பார் என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அந்தளவுக்கு திறமை வாய்ந்த அவர் வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் பங்கேற்க மாட்டார் என்பது இந்தியாவுக்கு மற்றுமொரு பின்னடைவாகும்.

இந்நிலையில் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு குணமடைந்து வரும் ரிஷப் பண்ட் முதல் முறையாக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வெளி உலகத்திற்கு வந்தார். குறிப்பாக கைத்தடியை பயன்படுத்தி மெல்ல மெல்ல நடந்து வந்த அவர் தற்போது பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் முழுமையாக குணமடையும் செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆனால் தற்போது முக்கால்வாசி குணமடைந்து விட்டேன் என்பதை காண்பிக்கும் வகையில் என்சிஏவில் பயிற்சிகளை எடுத்து வரும் அவர் தன்னுடைய கைத்தடியை தூக்கி போட்டு ஸ்டைலாக நடக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் யாருடைய உதவியும் இல்லாமலேயே நடக்க துவங்கியுள்ள அவர் என்சிவில் இருக்கும் இளம் வீரர்களுடன் டேபிள் டென்னிஸ் விளையாடி மகிழ்ந்தார். அதன் காரணமாக இன்னும் ஓரிரு மாதங்களில் முழுமையாக குணமடைந்து மீண்டும் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான பயிற்சிகளை அவர் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வாக்கிங் ஸ்டிக் இல்லாமலேயே நடக்கத் துவங்கியுள்ள அவருடைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்து வைரலாகி வருகிறது.

முன்னதாக இந்தியாவைப் போலவே ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் இல்லாமல் இந்த வருடம் அந்த அணி சுமாராக செயல்பட்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடி வருகிறது.

இதையும் படிங்க:CSK vs MI : சென்னையிலும் சிஎஸ்கே வெற்றியின் குறுக்கே அச்சுறுத்தும் மழை – போட்டி நடக்குமா? வெதர் ரிப்போர்ட் இதோ

இத்தனைக்கும் 2016 கோப்பையை கேப்டனாக வென்று ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரராக சாதனை படைத்த டேவிட் வார்னர் தலைமை தாங்கியும் இதர வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறுவதால் 2013க்குப்பின் 10 வருடங்கள் கழித்து தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை பதிவு செய்து மோசமான சாதனை படைத்த டெல்லி பிளே ஆப் சுற்றுருக்கு தகுதி பெறுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement