IND vs BAN : 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் – யாரை நீக்கியிருக்காங்க பாருங்க

IND-vs-BAN
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று டிசம்பர் 22-ஆம் தேதி டாக்கா நகரில் சற்று முன்னர் துவங்கியது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இருந்த வேளையில் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

IND-vs-BAN

- Advertisement -

அதேபோன்று இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை சமன் செய்யும் முனைப்புடன் பங்களாதேஷ் அணியும் களமிறங்கியுள்ளதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

அந்த வகையில் இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றத்தை செய்து இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் அதிரடி காட்டியுள்ளார். அந்த வகையில் கடந்த போட்டியின் போது பேட்டிங்கில் 40 ரன்களும், பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளையும் எடுத்து சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதினை வென்ற குல்தீப் யாதவ் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Unadkat

அவருக்கு பதிலாக 12 ஆண்டு காலமாக தனது இரண்டாவது போட்டிக்காக காத்திருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாற்றத்தை தவிர்த்து இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோன்று கையில் காயம் ஏற்பட்டதால் ராகுல் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்ட நிலையில் அவரே இந்த போட்டியில் கேப்டனாக செயல்படுகிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. அதன்படி இன்றைய இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : எல்லாரும் என்னை அந்த ஜாம்பவானோட கம்பேர் பன்றாங்க, நிச்சயம் அவர மாதிரி வருவேன் – இஷான் கிசான் தன்னம்பிக்கை பேச்சு

1) கே.எல் ராகுல், 2) சுப்மன் கில், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ரிஷப் பண்ட், 6) ஷ்ரேயாஸ் ஐயர், 7) அக்சர் படேல், 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) முகமது சிராஜ், 10) உமேஷ் யாதவ், 11) ஜெய்தேவ் உனட்கட்.

Advertisement