எல்லாரும் என்னை அந்த ஜாம்பவானோட கம்பேர் பன்றாங்க, நிச்சயம் அவர மாதிரி வருவேன் – இஷான் கிசான் தன்னம்பிக்கை பேச்சு

Ishan-1
- Advertisement -

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் இஷான் கிசான் உள்ளூர் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடியாக செயல்பட்டதால் 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமாகி முதல் டி20 போட்டியிலேயே அரை சதமடித்தார். ஆனால் இந்த வருடம் 15 கோடி என்ற பெரிய தொகைக்கு ஐபிஎல் தொடரில் தக்க வைக்கப்பட்டதால் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும் என்ற தேவையற்ற அழுத்தத்திற்கு உள்ளாகி சுமாராக செயல்பட்ட அவர் அதிலிருந்து வெளிவந்து இந்தியாவுக்காக கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டார்.

Ishan Kishan 1

- Advertisement -

குறிப்பாக கடந்த ஜூன் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக அசத்திய அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அதே அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டார். அதை விட வங்கதேசத்துக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் மிரட்டலாக பேட்டிங் செய்து 210 ரன்கள் குவித்த அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையும் அதிவேகமாக இரட்டை சதம்டித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையும் தகர்த்து புதிய உலக சாதனைகள் படைத்தார்.

குருவுடன் ஒப்பீடு:
மேலும் கடைசி வரை நின்றிருந்தால் 300 ரன்கள் குவித்திருப்பேன் என்ற தன்னம்பிக்கை மிகுந்த அதிரடி அணுகுமுறையை பின்பற்றும் அவர் இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். அப்படி அதிரடியாக விளையாடும் அவரும் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த மகத்தான கேப்டனாகவும் சாதனை படைத்த ஜாம்பவான் எம்எஸ் தோனி பிறந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

Ishan-Kishan

அதனாலேயே அவரை தன்னுடைய குருவாக கருதும் இசான் கிசான் இப்போதே நிறைய பேர் தம்மை அவருடன் ஒப்பிடுவதாக கூறியுள்ளார். ஆனால் தற்போது தோனியின் உயரத்தை தாம் எட்டவில்லை என்று அடக்கமாக பேசும் இஷான் கிசான் தன்னுடைய கேரியரில் அவர் சாதித்ததில் 70% சாதித்தால் கூட மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று தன்னம்பிக்கையுடன் பேசியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவருடன் என்னை ஒப்பிடுவதை நான் நேர்மறையான வழியில் எடுத்துக் கொள்கிறேன். குறிப்பாக அனைவரும் என்னை தோனி பாயுடன் ஒப்பிடும் போது எனக்குள்ளும் ஏதோ ஒரு திறமை இருப்பதாக நான் உணர்கிறேன்”

- Advertisement -

“அதனாலேயே ரசிகர்கள் என்னை அவரது இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள். அதே சமயம் அவர் நமது நாட்டுக்காக சாதித்ததில் நான் 70% சாதித்தால் கூட மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் அவர் இந்தியாவுக்காக ஏராளமானவற்றை செய்துள்ளார். அவர் நமக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்துள்ளார். டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி உட்பட நிறைய செய்துள்ளார். அதே சமயம் நானும் அவரது இடத்தில் இருந்து என்னுடைய அணியை வெற்றி பெற வைக்க விரும்புகிறேன்”

Ishan-Kishan-1

“தற்போது இரட்டை சதமடித்திருந்தாலும் நான் இப்போதும் அதே வீரர் தான். அந்த தருணத்திற்கு பின் என்னுடைய அம்மா எனக்கு போன் செய்து “அது நடந்து முடிந்தது. அதை நீ மறந்து விட்டு என்னையும் மறந்து விட்டு அடுத்ததாக சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறினார். மேலும் அடுத்ததாக நடைபெறும் ரஞ்சிக் கோப்பையிலும் நீ சதமடிக்க வேண்டும் என்று என்னுடைய அம்மா கூறினார். நாங்கள் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லா விட்டாலும் அதிலிருந்து நல்ல பாடத்தை கற்றுக் கொண்டோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அவர்தான் நம்மோட பெருமை. அவரை பத்தி கேவலமா பேசாதீங்க – ஷாஹீன் அப்ரிடி ஆதரவு

அவரது அம்மாவின் கோரிக்கையை போலவே இரட்டை சதமடித்த பின் ரஞ்சி கோப்பையில் விளையாடி வரும் இசான் கிசான் அங்கேயும் சதமடித்து அசத்தினார். மேலும் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தாலும் கடைசி போட்டியில் அவரது இரட்டை சதத்தால் 227 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட ஆறுதல் வெற்றி பெற்ற இந்தியா ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்தது.

Advertisement