அவர்தான் நம்மோட பெருமை. அவரை பத்தி கேவலமா பேசாதீங்க – ஷாஹீன் அப்ரிடி ஆதரவு

Shaheen-afridi
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தான் அணியை வரலாறு காணாத வகையில் மண்ணை கவ்வ வைத்தது. முதல் ஆட்டத்திலிருந்து தங்களது ஆதிக்கத்தை பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்களை தொடரின் எந்தவொரு இடத்திலும் எழ விடவில்லை.

அதன்படி ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்திலும், முல்தான் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்திலும், இறுதியாக கராச்சியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட அவர்கள் டி20 கிரிக்கெட் போன்று அதிரடியாக விளையாடியது அனைவரது மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.

- Advertisement -

அதே வேளையில் அவர்களிடம் அடி வாங்கிய பாகிஸ்தான் அணியானது தற்போது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஏனெனில் இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான அணி தங்களது சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணம் அனுபவம் மற்ற கேப்டனாக பாபர் அசாம் இருப்பது தான் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் அவர் கேப்டன் பதவியில் இருந்து வெளியே வந்தால் தான் பாகிஸ்தான அணி சரியாகும் என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை ஆதரித்து அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தின் மூலமாக பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

- Advertisement -

நம்முடைய கேப்டனுக்கு கொஞ்சம் மரியாதையை கொடுங்கள். பாபர் அசாம் நம்முடைய பெருமை. அவருக்கு நாம் தொடர்ந்து ஆதரவுகளை கொடுக்க வேண்டும். இன்னும் அவருடைய கதை முடியவில்லை என்று அவருக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்து அந்த பதிவினை பகிர்ந்து இருந்தார்.

இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் அணிக்கு இனியும் அவர் தேவை. சீனியர் வீரரை பாராட்டிய – சஞ்சய் மஞ்சரேக்கர்

ஒருபுறம் பாகிஸ்தான் அணி குறித்து விமர்சனம் பெருகிவரும் வேளையில் பாபர் அசாம் மீதும் கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாபர் அசாமும் சற்று மன வருத்தத்தில் சில கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்.

Advertisement