யாரும் எதிர்பாரா விதமாக 4 மாற்றங்களை ஒரே போட்டியில் செய்த கேப்டன் ராகுல் – விவரம் இதோ

Rahul-1
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியதன் காரணமாக ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

pant4

இந்தப் போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்ததால் இன்றைய மூன்றாவது போட்டியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அந்த வகையில் இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கேப்டன் ராகுல் 4 மாற்றங்களை அதிரடியாக செய்துள்ளார். அதன்படி ஆல்ரவுண்டரான வெங்கடேச ஐயர் வெளியற்றப்பட்டு
அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

sky

அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், புவனேஸ்வர் குமார் மற்றும் சுழல் பந்து வீச்சாளர் அஷ்வின் ஆகியோர் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ், தீபக் சாஹர் மற்றும் பிரசித் கிருஷணா ஆகியோர் களம் இறக்கப்பட்டு உள்ளனர். கடைசியாக நடைபெற்று முடிந்த 2 ஒருநாள் போட்டியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இந்திய அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : இன்றைய 3 ஆவது ஒருநாள் போட்டிக்கான அணியில் ஏற்படவுள்ள மிக முக்கிய மாற்றம் – விவரம் இதோ

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் செய்யப்பட்டுள்ள 4 மாற்றங்கள் இதோ :

1) ஷிகார் தவான், 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) ரிஷப் பண்ட், 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) வெங்கடேஷ் ஐயர், 7) ஷர்துல் தாகூர், 8) அஷ்வின், 9) பும்ரா, 10) முகமது சிராஜ், 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement