கியர் கார் மாதிரி இப்படி ஒரு பிளேயரா.. ஐபிஎல் தொடரில் அதை மட்டும் செய்ங்க.. இர்பான் பதான் அறிவுரை

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக 3 வகையான கிரிக்கெட்டிலும் துவக்க வீரராக விளையாடிய அசத்தி வந்தார். இருப்பினும் நாளடைவில் அந்த இடத்தில் மெதுவாக விளையாடியதால் ஓப்பனிங் இடத்தை இழந்த அவர் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

அதில் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய அவர் இந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலும் சதமடித்து அசத்தினார். இருப்பினும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. அதன் காரணமாக 2024 டி20 உலகக் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கியர் கார்:
குறிப்பாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் துவக்க வீரர்களாக இருப்பதால் அவருக்கு ஓப்பனிங்கில் இடம் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது. எனவே அடுத்ததாக நடைபெறும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக அதுவும் அழுத்தமான மிடில் ஆர்டரில் அபாரமாக செயல்பட்டு பெரிய ரன்கள் குவித்தால் மட்டுமே அவருக்கு டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஆட்டோமேட்டிக் கார்கள் வந்துள்ள இந்த நவீன யுகத்தில் கியர்களை கொண்ட கார் போல அசத்தும் திறமை கே.எல் ராகுலிடம் இருப்பதாக இர்பான் பதான் பாராட்டியுள்ளார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அதிரடியாக விளையாடக்கூடிய பல வீரர்களுக்கு மத்தியில் பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் அசத்தக்கூடிய திறமையை அவர் கொண்டிருப்பதாகவும் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதனால் வரும் ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடினால் உலக கோப்பையிலும் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம் என்று மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ஆட்டோமேட்டிக் கார்கள் இருக்கும் தலைமுறையில் கே.எல் ராகுல் கியரில் இயங்கும் காரை போன்றவர். அவரால் 1 முதல் 5 வரை எந்த வகையான கியரிலும் பேட்டிங் செய்ய முடியும்

இதையும் படிங்க: கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா 2 பேரும் டீம்ல இருந்தாலும் ஒரு கண்டிஷனை போட்டுள்ள பி.சி.சி.ஐ – விவரம் இதோ

“தேவைப்பட்டால் அவரால் ஆறாவது கியரில் கூட அதிரடியாக விளையாட முடியும். எனவே அதை அடிப்படையாக வைத்து கேஎல் ராகுல் லக்னோ அணிக்காக மிடில் ஆர்டரில் விளையாடுவது மோசமானதாக இருக்காது. அதன் காரணமாக குயிண்டன் டீ காக் – கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கலாம். அந்த இருவரும் தேர்வு செய்யப்பட்டால் லக்னோ அணியின் பவுலர்கள் அனைவரும் இந்திய வீரர்களாக இருப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement