கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா 2 பேரும் டீம்ல இருந்தாலும் ஒரு கண்டிஷனை போட்டுள்ள பி.சி.சி.ஐ – விவரம் இதோ

Jadeja-and-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்த வேளையில் இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றனர்.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான எஞ்சியுள்ள மூன்று போட்டிக்கான இந்திய அணி பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அந்த அணியில் மொத்தம் 17 வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ள வேளையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு பிசிசிஐ ஒரு கண்டிஷனை விதித்துள்ளது.

அதாவது முதல் போட்டியில் விளையாடியிருந்த அவர்கள் இருவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காயம் காரணமாக தவறவிட்டனர். அதன் பின்னர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று தங்களது உடற்தகுதியை நிரூபித்துள்ளனர்.

- Advertisement -

ஆனால் அவர்கள் மீண்டும் இந்த தொடரில் இடம் பிடித்திருந்தாலும் பிட்னஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட் இருந்தால் மட்டுமே அவர்களால் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட முடியும். என்று பிசிசிஐ-யை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : தோனி இருந்த போதே .. பட்டைத் தீட்டாத வைரமான அவரை கேப்டனா பார்த்தேன்.. ரவி சாஸ்திரி பெருமிதம்

இதன் காரணமாக கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முழு உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே எஞ்சியுள்ள மூன்று போட்டியிலும் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement