யுவி, தோனியின் இடத்தை நிரப்பி வரும் அவரை விமர்சிக்கலாமா? சொதப்பல் வீரருக்கு அஸ்வின் மனசாட்சியற்ற பாராட்டு

ashwin 2
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவிலும் அதற்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 30 முதல் பாகிஸ்தானிலும் துவங்குவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய அணியை பலப்படுத்தியுள்ளது.

KL rahul Shreyas Iyer

- Advertisement -

முன்னதாக 2023 உலகக்கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியில் ரோகித் சர்மா, கில், விராட் கோலி ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல திறமையுடன் நல்ல ஃபார்மில் இருந்த போதிலும் ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் களமிறங்குவதால் மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அதனால் ஒரு சமயத்தில் யுவராஜ் சிங், எம்எஸ் தோனி போன்ற சரிந்த இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்தும் வீரர்களை கொண்டிருந்ததால் பலமாக இருந்த மிடில் ஆர்டர் தற்போது மிகவும் பலவீனமாக இருப்பதாக ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மனசாட்சியற்ற அஸ்வின்:
சொல்லப்போனால் யுவராஜ் ஓய்வுக்கு பின் அவரை போன்ற வீரர் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் யுவராஜ் சிங் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் ஓய்வு பெற்ற பின் அவர்களுடைய இடத்தை நிரப்பும் அளவுக்கு கேஎல் ராகுல் செயல்பட்டு வருவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் மனசாட்சியின்றி பாராட்டியுள்ளார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் ஆகியோர் 4 மற்றும் 5 ஆகிய இடங்களில் விளையாடுவதற்கு தகுதியானவர்கள் என்பதால் அவர்களை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Ashwin

“யுவராஜ் சிங் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் ஓய்வு பெற்ற பின் இந்தியா அவர்களுக்கான மாற்று வீரர்களை தேடிக் கொண்டிருந்தது. அந்த இடத்தை கேஎல் ராகுல் நிபுணத்துவத்தால் நிரப்பியுள்ளார். எனவே 5வது இடத்தில் விளையாடுவதற்கு பூட்டப்பட்டுள்ள அவர் நம்முடைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். ரிஷப் பண்ட் காயத்தை சந்திப்பதற்கு முன்பாக ராகுல் 2வது விக்கெட் கீப்பராக இருந்தார். ஆனால் தற்போது இசான் கிசான் 2வது விக்கெட் கீப்பராக வரும் அளவுக்கு ராகுல் தமக்கு கிடைத்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்துள்ளார்”

- Advertisement -

“தற்போது லேசான காயத்தை சந்தித்திருந்தாலும் அவர் ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் விளையாடுவார் என்று நம்பலாம். ஒருவேளை அவர் விளையாடாமல் போனால் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள சஞ்சு சாம்சன் தற்காலிகமாக விளையாடுவார். கேஎல் ராகுல் போலவே ஸ்ரேயாஸ் ஐயரும் இந்த அணியில் முக்கியமானவர். இந்திய அணியில் சுழல் பந்து வீச்சை மிகவும் சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய அவர் 4வது இடத்தில் தொடர்ச்சியாக அசத்தியுள்ளார். அந்த இடத்தில் அவர் விளையாடிய போதெல்லாம் வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். எனவே அவர் ஃபிட்டாகி விளையாடும் பட்சத்தில் 4வது இடத்திற்கான எந்த விவாதமும் இருக்காது” என்று கூறினார்.

முன்னதாக 2014இல் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறிய கேஎல் ராகுல் 2019க்குப்பின் தொடக்க வீரராக களமிறங்கிய பின்பே ஓரளவு வெற்றிகரமாக செயல்பட்டார். அதிலும் நாளடைவில் தம்முடைய இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தடவலாக செயல்பட்ட அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியை சந்திக்கும் அளவுக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சுமாராக செயல்பட்ட காரணத்தாலேயே ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

இதையும் படிங்க:2023 உ.கோ : பும்ரா இல்ல, அவர் தான் ரோஹித் சர்மாவின் துருப்புச்சீட்டு பவுலரா இருப்பாரு – இளம் வீரரை பாராட்டிய கைப்

அந்த வாய்ப்பில் கடந்த ஜனவரி பிப்ரவரியில் நடந்த இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர்களில் ஒரு சில போட்டிகளில் மட்டுமே அசத்திய அவர் தோனி மற்றும் யுவராஜ் இடத்தை நிரப்பும் அளவுக்கு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பதாக அஸ்வின் தெரிவிப்பது மனசாட்சியற்ற கருத்து என்று ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.

Advertisement