2023 உ.கோ : பும்ரா இல்ல, அவர் தான் ரோஹித் சர்மாவின் துருப்புச்சீட்டு பவுலரா இருப்பாரு – இளம் வீரரை பாராட்டிய கைப்

Mohammed kaif
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை விறுவிறுப்பாக நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வலுவான அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல சாம்பியன் பட்டம் வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தலைகுனியும் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் களமிறங்குகிறது. அந்த நிலைமையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 2023 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Bumrah

- Advertisement -

அதில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய அணியை பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு முன்பாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒரு வழியாக முழுமையாக குணமடைந்து அயர்லாந்து தொடரில் களமிறங்கிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அபாரமான கம்பேக் கொடுத்துள்ளது தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

துருப்புச்சீட்டு பவுலர்:
ஏனெனில் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்டுள்ள அவர் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து போட்டியின் எந்த நேரத்திலும் துல்லியமான யார்கர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் கொண்டு வரக்கூடிய கருப்பு குதிரையாக பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட அவர் காயத்தால் விலகியது 2022 ஆசிய மற்றும் டி20 டி20 உலக கோப்பையை தொடர்ந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Kuldeep yadav 2

எனவே இந்த ஆசிய கோப்பையில் பும்ரா தான் இந்தியாவில் துருப்பு சீட்டு பவுலராக இருப்பார் என்று எவ்விதமான சந்தேகமின்றி நம்பலாம். இந்நிலையில் பும்ராவை விட சுழல் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தான் இந்த உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மாவின் துருப்பு சீட்டு பவுலராக இருப்பார் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாட நினைக்கும் பேட்ஸ்மேன்களுக்கு அவர் மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கும் கைப் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டது பின்வருமாறு.

- Advertisement -

“குல்தீப் யாதவ் தான் இந்த ஆசிய கோப்பையில் ரோகித் சர்மாவின் ஆட்டநாயகனாக இருப்பார். குறிப்பாக இந்த ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையில் மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவ் செயல்பாடுகளை நான் உற்சாகமாக பார்க்கப்போகும் விஷயங்களில் ஒன்றாகும். ஏனெனில் விக்கெட் டேக்கரான அவர் மிடில் ஓவர்களில் அடித்து நொறுக்கி ரன்களை குவிக்க நினைக்கும் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஃபிளைட் மற்றும் சுழல் ஆகியவற்றை பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுக்க முயற்சிப்பதை பார்ப்பது எப்போதுமே சிறந்த போட்டியாக இருக்கும்” என்று கூறினார்.

Kaif

அவர் கூறுவது போல சைனாமேன் எனப்படும் வித்தியாசமான சுழல் பந்து வீச்சு ஆக்சனை கொண்டுள்ள குல்தீப் யாதவ் கடந்த 2017இல் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே தன்னுடைய சிறந்த செயல்பாடுகளால் 2019 உலகக்கோப்பையில் முதன்மை ஸ்பின்னராக விளையாடினார். இருப்பினும் அதன் பின் ஃபார்மை இழந்து தடுமாறியதால் 2021, 2022 டி20 உலக கோப்பையில் கழற்றி விடப்பட்ட அவரை ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகமும் விடுவித்தது. அதற்கிடையே காயத்தை சந்தித்தாலும் மனம் தளராமல் போராடிய அவர் டெல்லி அணியில் சிறப்பாக செயல்பட்டதால் மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க:ஆசிய கோப்பை 2023 : மிகவும் கடினமான யோ-யோ டெஸ்டில் தனது ஸ்கோரை பகிர்ந்த ஃபிட்னெஸ் கிங் விராட் கோலி – எவ்வளவு தெரியுமா?

அப்போதிலிருந்து முன்பை விட நல்ல லைன், லென்த் போன்றவற்றை பின்பற்றி முன்பை விட சிறப்பாக பந்து வீசும் அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நிறைய விக்கெட்டுகளை எடுத்து வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக மிடில் ஆர்டரில் சவாலை கொடுக்கும் அளவுக்கு பந்து வீசும் அவர் சஹால், அக்சர் படேல் போன்றவர்களை காட்டிலும் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருப்பதன் காரணமாகவே இந்த அணியில் முதன்மை ஸ்பின்னராக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement