அவர் சுயநலமின்றி விளையாடி எங்களோட வேலைய ஈஸியாக்குறாரு.. கேஎல் ராகுல் பாராட்டு

KL Rahul 3
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் 4 தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்து அசத்தி வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகளை தோற்கடித்த இந்தியா நேற்று புனேவில் நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்தையும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அப்போட்டியில் வங்கதேசம் நிர்ணயித்த 257 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 48, சுப்மன் கில் 53 ரன்கள் அடித்து நல்ல அடித்தளத்தை கொடுத்தனர். அதை வீணடிக்காமல் அடுத்ததாக ஜோடி சேர்ந்த விராட் கோலி சிறப்பான சதமடித்து 103* ரன்களும் கேஎல் ராகுல் 34* ரன்களும் விளாசி எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள்.

- Advertisement -

சுயநலமற்ற கேப்டன்:
அந்த வகையில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் 48 (40) ரன்களை அதிரடியாக எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்த ரோஹித் சர்மா இத்தொடர் முழுவதும் ஆரம்பத்திலேயே சுயநலமின்றி தனக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடி வேகமாக ரன்களை எடுத்து அடுத்ததாக வரும் தங்களைப் போன்ற பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்கி விடுவதாக கேஎல் ராகுல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா பந்து வீச்சாளர்களை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் பேட்டிங் செய்வதாக எனக்கு தோன்றவில்லை. அவர் நல்ல நிலையில் இருக்கிறார். பல ஆண்டுகளாக அற்புதமான வீரராக இருந்து வரும் அவருக்கு தம்முடைய இன்னிங்ஸை எப்படி வேகப்படுத்துவது என்பது நன்றாக தெரியும். குறிப்பாக சில பவுண்டரிகளை அடித்ததும் எப்படி பந்து வீச்சாளர்களுக்கு மேல் செல்வது என்பது அவருக்கு தெரியும்”

- Advertisement -

“அதை சிறப்பான ஷாட்களை அடித்து அவர் செய்து வருகிறார். அவர் அதிரடியாகவோ அல்லது புதிதாகவோ அடிப்பதை நீங்கள் பார்க்க முடியாது. மாறாக சரியான ஷாட்டுக்களை சமநிலையுடன் இருந்து பந்தை அடிப்பார். எனவே அவரைப் போன்ற பேட்ஸ்மேன் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடும் போது மிடில் ஆர்டரில் இருக்கும் வீரர்களுக்கு வேலை மிகவும் எளிதாகிறது”

இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியா எத்தனை போட்டிகளில் விளையாட மாட்டார்? – அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட பி.சி.சி.ஐ

“எடுத்துக்காட்டாக கடந்த சில போட்டிகளில் நாங்கள் சேசிங் செய்யும் போது 60 ரன்களை 151, 160 ஆகிய பந்துகளில் எடுக்க வேண்டும் என்பது போன்ற நிலைமையில் நான் களமிறங்கினேன். அந்த வகையில் ரோகித் சர்மா எங்களுடைய வேலையை மிகவும் எளிதாக்கி அனைத்து அணியினரும் முன்னோக்கி வெற்றிகரமாக நடப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார்” என்று கூறினார்.

Advertisement