ஹார்டிக் பாண்டியா எத்தனை போட்டிகளில் விளையாட மாட்டார்? – அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட பி.சி.சி.ஐ

Jay-Shah-and-Pandya
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும், துணை கேப்டனுமான ஹார்டிக் பாண்டியா அக்டோபர் 19-ஆம் தேதி நேற்று புனே நகரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது பந்து வீசுகையில் கணுக்காலில் காயம் ஏற்பட்டு பந்து வீசாமல் ஓய்வறைக்கு திரும்பினார். மேலும் போட்டி முடிவு வரை அவர் மீண்டும் மைதானத்திற்கு வராததால் அடுத்த போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் : தற்போதைக்கு பாண்டியா நலமுடன் தான் இருக்கிறார் என்றும் அவரது ஸ்கேன் ரிசல்ட்டுக்கு பிறகே அடுத்த கட்ட தகவல் தெரிய வரும் என்று அறிவித்திருந்தார்.

- Advertisement -

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படும் பாண்டியா ஒரு சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனால் அது இந்திய அணிக்கு பின்னடைவாக மாறும் என்று பேசப்பட்டது. இந்நிலையில் பாண்டியாவின் உடற்தகுதி குறித்த முக்கிய அறிவிப்பை தற்போது இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது பிசிசிஐ மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் பாண்டியா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் ரிசல்ட்க்கு பின்னரே அணியில் இணைவது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இவ்வேளையில் அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக தர்மசாலா நகரில் நடைபெற இருக்கும் லீக் போட்டிக்கான அணியில் பாண்டியா விளையாட மாட்டார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

இது குறித்து வெளியான தகவலின் படி : இந்திய அணியின் துணை கேப்டனான ஹார்டிக் பாண்டியா கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் பாதியிலேயே வெளியேறி இருந்தார். தற்போது அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரால் அடுத்த போட்டியில் விளையாட முடியாது என்றும் எனவே அக்டோபர் 20-ஆம் தேதி தர்மசாலா செல்லும் இந்திய அணியுடன் அவர் பயணிக்க மாட்டார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பல் இல்லாத வங்கதேச அட்டாக்கிடம் சொதப்பலாமா? கோலியை பாருங்க.. இந்திய வீரரை விமர்சித்த கவாஸ்கர்

மேலும் அதற்கு அடுத்ததாக லக்னோ நகரில் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு போட்டியில் தான் அவர் மீண்டும் இந்திய அணியுடன் இணைவார் என்று பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பாண்டியா இந்த இடைப்பட்ட நேரத்தில் ஒரு போட்டியை மட்டுமே தவிர விடுவார் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement