பல் இல்லாத வங்கதேச அட்டாக்கிடம் சொதப்பலாமா? கோலியை பாருங்க.. இந்திய வீரரை விமர்சித்த கவாஸ்கர்

Sunil Gavaskar 3
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்த இந்தியா தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்தது. புனே நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் வங்கதேசம் நிர்ணயித்த 257 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 48, கில் 53 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

அதனால் ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களில் அவுட்டானாலும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த விராட் கோலி சிறப்பான சதமடித்த 103* ரன்களும் கே.எல் ராகுல் 34* ரன்களும் எடுத்து 41.3 ஓவரிலேயே இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தனர். மறுபுறம் பேட்டிங்கை போலவே பந்து வீச்சிலும் சுமாராக செயல்பட்ட வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெகதி ஹசன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் 3வது தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

கவாஸ்கர் விமர்சனம்:
இந்நிலையில் இப்போட்டியில் வங்கதேச பவுலிங் பல் இல்லாமல் மிகவும் சுமாராக இருந்ததாக தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் அதை பயன்படுத்தி சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சதங்களை அடிக்காமல் தங்களுடைய விக்கெட்டை எதிரணிக்கு பரிசளித்ததாக விமர்சித்துள்ளார். மறுபுறம் சூழ்நிலைகளை கச்சிதமாக பயன்படுத்தி விராட் கோலி சதமடித்ததை இந்த இளம் வீரர்கள் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“ஸ்ரேயாஸ் ஐயர் பொறுமையை இழந்து 19 ரன்களில் இருந்த போது தன்னுடைய விக்கெட்டை பரிசளித்தார். அதே போல அரை சதமடித்தும் சுப்மன் கில் தம்முடைய விக்கெட்டை பரிசளித்தார். ஆனால் விராட் கோலி எப்போதாவது தான் தன்னுடைய விக்கெட்டை வீசுவார். சொல்லப்போனால் தம்முடைய விக்கெட்டை கொடுப்பதற்கு அவர் உங்களை போராட வைப்பார்”

- Advertisement -

“குறிப்பாக 70 – 80 ரன்கள் எடுத்ததும் சதமடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதால் அதை ஏன் நாம் அடிக்கக் கூடாது? என்று அவர் உணர்ந்தார். ஏனெனில் சதம் என்பது உங்களுக்கு அனைத்து நாட்களிலும் கிடைக்காது. எனவே சதத்தை எப்படி அடிப்பது என்பதை தெரிந்து கொள்வது ஸ்ரேயாஸ் ஐயர் சுப்மன் கில் போன்றவர்களுக்கு முக்கியமாகும். அதில் கில் ஓரளவு நல்ல சதங்களை அடித்து வருகிறார். ஆனால் ஸ்ரேயாஸ் சதங்களை அடிக்க தடுமாறுகிறார்”

இதையும் படிங்க: இந்தியாவ நெனச்சா கவலையா இருக்கு.. ரொம்ப ஓவரா போனா கோப்பை ஜெயிக்க முடியாது.. இயன் ஹீலி ஓப்பன்டாக்

“பொதுவாக 4வது இடத்தில் பேட்டிங் செய்யும் அவர் இது போன்ற பிட்ச்களில் பல் இல்லாத பவுலிங் அட்டாக்கை கொண்ட எதிரணிக்கு எதிராக தன்னுடைய சதத்தையும் வாய்ப்பையும் பரிசளிக்கிறார்” என்று கூறினார். இந்த நிலையில் அடுத்ததாக அக்டோபர் 22ஆம் தேதி வலுவான நியூசிலாந்துக்கு எதிராக தரம்சாலா மைதானத்தில் இந்தியா தன்னுடைய 4வது போட்டியில் களமிறங்க தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement