இந்தியாவ நெனச்சா கவலையா இருக்கு.. ரொம்ப ஓவரா போனா கோப்பை ஜெயிக்க முடியாது.. இயன் ஹீலி ஓப்பன்டாக்

ian healy
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் தொடர்ச்சியான 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் செமி ஃபைனல் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதால் 2011 போல சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஆழமாக உருவாகியுள்ளது.

ஏனெனில் இந்திய அணியில் பேட்டிங் துறையில் கேப்டன் ரோஹித் சர்மா, கில், விராட் கோலி, ராகுல் அனைவருமே நல்ல ஃபார்மில் அதிரடியாக விளையாடி சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தை செய்கின்றனர்.

- Advertisement -

கவலையில் ஹீலி:
அவர்களுடன் குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ் ஆகியோர் பவுலிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரங்களாக அசத்தி வருவதால் இந்திய அணி மிகவும் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் ஆரம்பத்திலேயே முழுமையான எனர்ஜியையும் வெளிப்படுத்தி இந்தியா அபாரமாக செயல்படுவதால் நாக் அவுட் சுற்றில் இதே போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்த முடியுமா என்ற பயமும் கவலையும் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் ஹீலி தெரிவித்துள்ளார்.

அதாவது 2015, 2019 உலகக் கோப்பைகளில் லீக் சுற்றில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத இந்தியா முக்கியமான நாக் அவுட் சுற்றில் தோற்றது. அதே போல இம்முறையும் நடந்து விடுமோ என்ற பயத்தை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி சென்கியூ இணையத்தில் பேசியது பின்வருமாறு. “அவர்கள் இந்த வெற்றிகளை எளிதாக பெறவில்லை. இந்தியாவைப் பற்றி தற்போது எனக்கு புதிய பயம் வந்துள்ளது”

- Advertisement -

“ஏனெனில் ரோஹித், விராட், கில் ஆகியோர் நல்ல இன்னிங்ஸ் விளையாடி டாப் செயல்பாடுகளை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் அதில் வெளிப்படும் எனர்ஜியை பார்த்தால் அவர்கள் உணர்ச்சிவசப்பட போகிறார்கள் என்பதே என்னுடைய பயமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் தற்போது நிறைய எனர்ஜியை செலுத்தி மிகைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஒருவர் பந்தை தவறாக எறியும் போது அல்லது சிறப்பான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தும் போது அதீத உற்சாகம் வெளிப்படுகிறது”

இதையும் படிங்க: ஒருவேளை இருக்குமோ? களத்தில் சுப்மன் கில்லுக்கு ஆதரவாக சாரா டெண்டுல்கர் செய்த செயலால் – சந்தேகத்தை கிளப்பும் ரசிகர்கள்

“எனவே அந்த மிகைப்படுத்தலான செயல்பாடுகளுக்காக நான் கவலைப்படுகிறேன். ஆனால் தற்போது இந்தியா ஒரு மிகச்சிறந்த அணியை பெற்றுள்ளார்கள். மேலும் விராட் கோலி ஃபீல்டிங் துறையில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அடுத்து வரும் போட்டிகளில் அவர்கள் இதை விட இரு மடங்கு செயல்பாடுகளை வெளிப்படுத்தியாக வேண்டும். எனவே உங்களுடைய எனர்ஜியை இப்போதே வீணடித்து விடாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement