வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து தீடீரென வெளியேறிய 2 வீரர்கள் – காரணம் என்ன?

INDvsWI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

prasidh 1

- Advertisement -

இந்த போட்டியிலும் முதலாவதாக விளையாடிய இந்திய அணி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 265 ரன்களை குவித்தது. பின்னர் தற்போது 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்வி தற்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த ஒருநாள் தொடரை இந்திய அணிக்கு எதிராக 3 க்கு 0 என்ற கணக்கில் இழக்கும் என்றும் தெரிகிறது. இந்நிலையில் அடுத்ததாக இந்த ஒருநாள் தொடர் முடிந்த கையோடு பிப்ரவரி 16, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியை ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது.

Rahul-1

அப்படி அறிவிக்கப்பட்ட அணியில் இருந்து திடீரென 2 இந்திய வீரர்கள் தற்போது வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தாமாக முன்வந்து வெளியேறிய அந்த இரண்டு வீரர்கள் யாரெனில் தொடக்க வீரரான ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் ஆகியோர் இந்த டி20 தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர்.

- Advertisement -

ராகுலுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாகவும், அக்சர் பட்டேல் காயத்திலிருந்து முழுமையாக மீளாத காரணத்தினாலும் இந்த தொடரில் இருந்து தாமாக முன்வந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்கள். இதனை இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : காரணமே இல்லாமல் திடீர்னு இந்திய அணியில் என்னை கழற்றி விட்டுட்டாங்க – புலம்பும் இந்திய வீரர்

இதில் தீபக் ஹூடா ஏற்கனவே தற்போது ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக தனது வாய்ப்புக்கு காத்திருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இம்முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement